Sign in tamil
பள்ளி மாணவர்கள் தமிழில் தான் தங்கள் இனிஷியல் மற்றும் கையொப்பம் இட வேண்டும்’ என பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
அண்மையில், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு, பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் பிறப்பித்திருந்த உத்தரவில், உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள், அலுவலர்கள் அனைவரும், தங்கள் இனிஷியல் மற்றும் பெயரை தமிழில் தான் எழுத வேண்டும்.
இதுபோல், அரசு விழா, சுற்றறிக்கைகள் அனைத்தும் தமிழிலேயே இருக்க வேண்டும். இதை முதன்மைக் கல்வி அலுவலர்கள், தங்களது பகுதி ஆசிரியர்கள், அலுவலர்களுக்கு அறிவுறுத்த வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில், பள்ளி மாணவர்கள் தமிழில் தான் இனிஷியலை எழுத வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அதேபோல், கையொப்பத்தையும் தமிழில் இட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், வருகைப்பதிவேடு உள்ளிட்டவற்றில் மாணவர்கள் பெயரை எழுதும்போது முன்னெழுத்தையும் தமிழிலேயே பதிவு செய்திட வேண்டும் என தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும் படிக்க:
கல்வி செலவை பார்த்துக்கொள்ள பானி பூரி விற்கும் பெண்- வைரலாகும் வீடியோ.!
Share your comments