புயல் மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு வழங்கப்படும் இடுபொருள் நிவாரணத் தொகை ஹெக்டேருக்கு ரூ.20 ஆயிரம் என உயர்த்தப்படுவதாக தமிழக அரசு (TamilNadu Government) அறிவித்துள்ளது.
இதுகுறித்து தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி (Chief Minister Edappadi Palanisamy) வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
-
அடுத்தடுத்து தாக்கிய நிவர் மற்றும் புரெவி புயல்களினால் (Niver and Burevi Cyclone), தமிழகத்தின் பல பகுதிகள் பாதிக்கப்பட்டதுடன், வேளாண் மற்றும் தோட்டக்கலைப் பயிர்களுக்கும் பெருமளவில் சேதம் ஏற்பட்டுள்ளது.
-
இதையடுத்து, மத்தியக் குழு (Central Team) புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டது.
-
இதன் அடிப்படையில், நிவர் புயலின் காரணமாக ஏற்பட்ட சேதங்களை சீரமைக்க மொத்தம் 3,750.38 கோடி ரூபாயும், புரெவி புயலின் காரணமாக ஏற்பட்ட சேதங்களை சீரமைக்க மொத்தம் 1,514 கோடி ரூபாய் ய் தேவைப்படும் என மத்திய அரசுக்கு தெரிவிக்கப்பட்டு, மத்திய அரசின் நிதி உதவி கோரப்பட்டுள்ளது.
-
இந்நிலையில் தமிழக விவசாயிகளின் நலனைக் கருத்தில்கொண்டு, தேசிய பேரிடர் நிவாரண நிதியின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி, மானாவரி மற்றும் நீர்ப்பாசன வசதி பெற்ற நெற்பயிர்களுக்கும், நீர்ப்பாசன வசதி பெற்ற இதர பயிர்களுக்கும் ஹெக்டேர் ஒன்றுக்கு வழங்கப்படும் இடுபொருள் நிவாரணத் தொகைரூ.13 ஆயிரத்து 500 லிருந்து, 20 ஆயிரம்- ரூபாயாக உயர்த்தப்படுகிறது.
-
இதேபோல், மானாவாரி நெற்பயிர் தவிர, அனைத்து மானாவாரி பயிர்களுக்கும் இடுபொருள் நிவாரணத் தொகையான ஹெக்டேர் ஒன்றுக்கு வழங்கப்படும் 7410 ரூபாய் என்பதை, 10 ஆயிரம்- ரூபாயாக உயர்த்தியும்,
-
பல்லாண்டு கால பயிர்களுக்கு இடுபொருள் நிவாரணத்தொகையாக ஹெக்டேர் ஒன்றுக்கு வழங்கப்படும் 18 ஆயிரம்- ரூபாய் என்பதை, 25 ஆயிரம்- ரூபாயாக உயர்த்தியும் வழங்க ஆணையிட்டுள்ளேன்.
-
உயர்த்தப்பட்ட இந்த இடுபொருள் நிவாரணத்திற்கான தொகையை, தமிழ்நாடு அரசு வழங்கும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் படிக்க...
பொங்கலுக்கு வலுசேர்க்கும் மண்பானைகள் - தயாரிப்பு பணிகள் தீவிரம்!
ஆரோக்கியத்தைப் பெற வேண்டுமா? பாரம்பரிய உணவுகளுக்குத் திரும்புங்கள்!
மாதம் ரூ.42 செலுத்தினால் ஆயுள் வரை ஓய்வூதியம்- அடல் பென்சன் யோஜனா திட்டம்!
Share your comments