Credit : Daily Thandhi
குடிமங்கலம் பகுதியில் பொரியல் தட்டை அறுவடை செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது. ஆனாலும், விலை குறைவால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். குடிமங்கலம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளில் விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. இப்பகுதிகளில் கிணற்றுப்பாசனம் (Well Irrigation) மூலம் விவசாயிகள் காய்கறி சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர். தட்டைபயறு, பீன்ஸ், பாசிப்பயறு வரிசையில் பொரியல் தட்டை உணவுபயிராகும்.
குறைந்த அளவு தண்ணீர்:
கேரள மாநிலத்தில் அவியல், பொரியல் கூட்டு என உணவில் அதிகளவு பயன்படுத்தப்படுவதால் குடிமங்கலம் பகுதியில் அறுவடை (Harvest) செய்யப்படும் பொரியல் தட்டை கேரள மாநிலத்திற்கு அதிக அளவில் விற்பனை செய்யப்படுகிறது. பொரியல் தட்டை சாகுபடிக்கு குறைந்த அளவு தண்ணீர் (Low water) போதுமானது. பொரியல் தட்டை விதைப்பு செய்த 60 நாட்களில் அறுவடைக்கு வரும் என்பதால் விவசாயிகள் பொரியல் தட்டை சாகுபடியில் ஆர்வம் காட்டி வருகின்றனர். குடிமங்கலம் பகுதியில் அறுவடை செய்யப்படும் பொரியல் தட்டை உடுமலை, பொள்ளாச்சி பகுதிகள் மட்டுமின்றி கேரளாவுக்கும் கொண்டு சென்று விற்பனை செய்யப்படுவதால் கூடுதல் விலை கிடைத்து வந்தது.
விலை சரிவு
பொரியல் தட்டை சாகுபடி குறித்து விவசாயி கூறியதாவது,
பொரியல் தட்டை அனைத்து வகை நிலங்களிலும் அனைத்துப் பருவத்திலும் சாகுபடி (Cultivation) செய்யலாம். குளிர் சீதோஷ்ண நிலை உள்ள பகுதியில் கூடுதல் மகசூல் (Yield) கொடுக்கும். வறட்சி காலங்களில் மகசூல் குறைந்து காணப்படும். பொரியல் தட்டை விதைப்பு செய்து 50 வது நாள் முதல் காய்கள் பறிக்கலாம். ஏக்கருக்கு நாளொன்றுக்கு 80 கிலோ முதல் 100 கிலோ வரை மகசூல் கிடைக்கும். ஒரு ஏக்கருக்கு உழவு, களை எடுத்தல், மருந்து தெளித்தல், உரமிடுதல் (Compost) என 20 ஆயிரம் வரை செலவாகிறது. ஏக்கருக்கு 10 டன் வரை மகசூல் கொடுக்கும். பொரியல் தட்டை கேரளாவில் நல்ல விலை கிடைத்து வந்த நிலையில் கடந்த சில நாட்களாக விலை சரிந்து கிலோ ரூ.8 முதல் ரூ.10 க்கு மட்டுமே விற்பனையாகிறது. இதனால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்
மேலும் படிக்க
கடும் வீழ்ச்சியில் வெங்காயத்தின் விலை! விவசாயிகள் கவலை!
பந்தல் அமைக்காமல் தரையில் புடலை சாகுபடி! அசத்தும் விவசாயிகள்!
Share your comments