1. செய்திகள்

கடும் வீழ்ச்சியில் வெங்காயத்தின் விலை! விவசாயிகள் கவலை!

KJ Staff
KJ Staff
Onion Rate
Credit : Times of India

கடந்த சில மாதங்களாக உச்சத்தில் இருந்த வெங்காயமத்தின் விலை, அதன் பிறகு விலை ஏறி ஏறி, இறங்கியது. சென்ற பிப்ரவரி மாதம் முழுவதும் காய்கறிகளின் விலை தொடர்ந்து வீழ்ச்சியடைந்து காணப்பட்டது. குறிப்பாக தக்காளி, வெங்காயம் (onion) விலைச் சரிவால் சென்னை வாசிகள் மகிழ்ச்சியடைந்தனர். ஆனால், இந்த மாதத்தின் தொடக்கம் முதலே காய்கறிகளின் விலையில் ஏற்ற இறக்கம் காணப்படுகிறது. நேற்று ஒரு சில காய்கறிகளின் விலை உயர்ந்திருந்த நிலையில் இன்று விலைச் சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் சென்னை வாசிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

வெங்காயம் விலை வீழ்ச்சி:

சென்னை கோயம்பேடு சந்தையில் இன்று (மார்ச் 22) ஒரு கிலோ தக்காளி (Tomato) 10 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்றும் இதே விலையில் தான் விற்பனையானது. ஒரு கிலோ வெங்காயம் விலை இன்று 10 ரூபாயாகக் குறைந்துள்ளது. நேற்று 18 ரூபாய்க்கு விற்பனையானது. ஒரே நாளில் 8 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது. ஒரு கிலோ அவரைக்காய் விலை நேற்று 5 ரூபாயிலிருந்து இன்று 20 ரூபாயாக அதிகரித்துள்ளது. பீன்ஸ் 20 ரூபாய்க்கும், பீட்ரூட் (Beetroot) 8 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதனால், விவசாயிகள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.

காய்கறிகளின் விலைப் பட்டியல்

தக்காளி - ரூ.10
வெங்காயம் - ரூ.10
அவரைக்காய் - ரூ.20
பீன்ஸ் - ரூ.20
பீட்ரூட் - ரூ.8
வெண்டைக்காய் - ரூ.10
நூக்கல் - ரூ.7
உருளைக் கிழங்கு - ரூ.12
முள்ளங்கி - ரூ.8
புடலங்காய் - ரூ.10
சுரைக்காய் - ரூ.5
பாகற்காய் - ரூ.10
கத்தரிக்காய் - ரூ.5
குடை மிளகாய் - ரூ.10
கேரட் - ரூ.15
காளிபிளவர் - ரூ.10
சவுசவு - ரூ.15
தேங்காய் - ரூ.25
வெள்ளரிக்காய் - ரூ.5
முருங்கைக்காய் - ரூ.25
இஞ்சி - ரூ.25
பச்சை மிளகாய் - ரூ.17
கருணைக் கிழங்கு - ரூ.20
கோவைக்காய் - ரூ.18

Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்

மேலும் படிக்க

பயிர்களை நாசம் செய்யும் வனவிலங்குகள்! யாரும் கண்டுகொள்ளாத நிலையில், நோட்டாவுக்கு வாக்களிக்க விவசாயிகள் தீர்மானம்!

டெல்லி விவசாயிகள் போராட்டக் களத்தில் தீ விபத்து! விவசாயி ஒருவருக்கு காயம்!

தனிப்பயிராக ஆமணக்கு சாகுபடி செய்வதில் விவசாயிகள் ஆர்வம்! அதிக மகசூலுடன் நல்ல வருவாய்!

English Summary: Onion prices Reduced! Farmers worried! Published on: 22 March 2021, 05:12 IST

Like this article?

Hey! I am KJ Staff. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.