சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதத்தை ஒவ்வொரு காலாண்டுக்கும் மத்திய அரசு திருத்தி வருகிறது. நாளை ஏப்ரல் 1ஆம் தேதி முதல் புதிய ஏப்ரல் - ஜூன் காலாண்டு தொடங்க உள்ளது. இந்த நிலையில், ஜூன் காலாண்டுக்கான சிறு சேமிப்பு வட்டி விகிதம் குறித்து மத்திய நிதியமைச்சகம் உத்தரவு வெளியிட்டுள்ளது.
சிறுசேமிப்பு திட்டங்கள்(Small Savings Schemes)
ஏப்ரல் - ஜூன் காலாண்டுக்கு சிறு சேமிப்பு திட்டங்களுக்கு வட்டி விகிதம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த வட்டி விகிதங்கள் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் ஜூன் 30ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.
புதிய வட்டி விகிதங்கள்:
- சேமிப்பு டெபாசிட் (Savings deposit) : 4%
- 1 ஆண்டு டைம் டெபாசிட் (1 Year Time deposit) : 6.8%
- 2 ஆண்டு டைம் டெபாசிட் (2 Year Time deposit) : 6.9%
- 3 ஆண்டு டைம் டெபாசிட் (3 Year Time deposit) : 7%
- 5 ஆண்டு டைம் டெபாசிட் (5 Year Time deposit) : 7.5%
- 5 ஆண்டு தொடர் வைப்பு நிதி (RD) : 6.2%
- சீனியர் சிட்டிசன் சேமிப்பு திட்டம் (Senior citizen savings scheme) : 8.2%
- மாத வருமான திட்டம் (Monthly Income Account Scheme) : 7.4%
- தேசிய சேமிப்பு சான்றிதழ் (National Savings certificate) : 7.7%
- பொது வருங்கால வைப்பு நிதி (PPF) : 7.1%
- கிசான் விகாஸ் பத்திரம் (Kisan Vikas Patra) : 7.5% (115 மாத முதிர்வு)
- செலவமகள் சேமிப்பு திட்டம் (Sukanya Samriddhi Account Scheme) : 8%
கவனிக்க வேண்டியவை
சேமிப்பு டெபாசிட், பொது வருங்கால வைப்பு நிதி (PPF) திட்டங்களுக்கு வட்டி விகிதம் மாற்றப்படவில்லை. மற்ற அனைத்து திட்டங்களுக்கும் வட்டி உயர்த்தப்பட்டுள்ளது.
கிசான் விகாஸ் பத்திரம் திட்டத்தில் இதற்கு முன் 7.2% வட்டி வழங்கப்பட்டது. ஆனால் அப்போது முதிர்வு காலம் 120 மாதங்களாக இருந்தது. தற்போது வட்டி விகிதம் 7.5% ஆக உயர்த்தப்பட்டுள்ளது. எனினும், முதிர்வு காலம் 115 மாதங்களாக குறைக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க
தங்க நகை வாங்கும் போது இதைப் பார்த்து வாங்குங்கள்: பொதுமக்களுக்கு எச்சரிக்கை!
புதிய சிம் கார்டு வாங்கும் போது கவனமாக இருங்கள்: மத்திய அரசு எச்சரிக்கை!
Share your comments