தமிழக ரேஷன் கடைகள் வாயிலாக, மக்களுக்கு இணையதள சேவை வழங்கும் திட்டம், விரைவில் செயல்படுத்தப்பட உள்ளது. மத்திய அரசு, 'பி.எம்.வாணி' திட்டத்தின் கீழ், மக்களுக்கு இணையதள சேவை வழங்க முடிவு செய்துள்ளது. இதற்காக, ரேஷன் கடைகளில் பொது தரவு மையம் ஏற்படுத்தி, இணையதள சேவை வழங்கப்பட உள்ளது.
இணைய சேவை (Internet Service)
தமிழகத்தில், 35 ஆயிரம் ரேஷன் கடைகள் உள்ளன. அவை, கார்டுதாரர்களின் முகவரிக்கு உட்பட்ட, 2 கி.மீ., துாரத்திற்குள் அமைந்திருப்பதால் மக்களால் எளிதில் செல்ல முடிகிறது. பி.எம்.வாணி திட்டத்தின் கீழ், ரேஷன் கடைகளை பொது தரவு மையமாக மாற்ற வாய்ப்புள்ளதா என்று ஆராய்ந்து அறிக்கை தருமாறு, மண்டல இணை பதிவாளர்களுக்கு, மே மாதம், கூட்டுறவு துறை சுற்றறிக்கை அனுப்பியது. அதன் அடிப்படையில், அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு உள்ளது.
வைபை (WiFi)
ரேஷன் கடைகளில், 'வைபை' வசதி ஏற்படுத்தி, அந்த கடைக்கு அருகில் இருப்போருக்கு இணையதள சேவை வழங்கப்பட உள்ளது. அங்கு மொபைல் போன், 'லேப்டாப்' எடுத்து வந்து இணையதள சேவைகளை பயன்படுத்தலாம். இணையதள சேவை பயன்படுத்துவோர், குறிப்பிட்ட தொகையை ரேஷன் கடைகளுக்கு கட்டணமாக செலுத்த வேண்டும்.
இதனால், ரேஷன் கடைகளை நடத்தும் கூட்டுறவு சங்கங்களுக்கு வருவாய் கிடைக்கும். அதிக இட வசதியுடன் சொந்த கட்டடங்களில் செயல்படும் ரேஷன் கடைகளில், இத்திட்டத்தை செயல்படுத்த, கூட்டுறவுத் துறை ஆயத்தமாகி வருகிறது.
மேலும் படிக்க
ரேஷன் கடையில் புதிய மாற்றம்: அரிசிக்கு பதிலாக கேழ்வரகு!
ரேஷன் கார்டுதாரர்களே: ஆதார் எண்ணை இணைக்க கடைசி தேதி ஜூன் 30!
Share your comments