திருட்டுப் போன அல்லது தொலைந்து போன மொபைல் போன்களை மிக எளிமையாக ட்ராக் செய்து, கண்டுபிடிக்கும் வகையில் புதிய அமைப்பு ஒன்றை மத்திய அரசு தற்போது அறிமுகம் செய்துள்ளது.
மொபைல் போன் கண்டுபிடிப்பு
இந்தியாவில் மொபைல் போன் திருட்டு சம்பந்தப்பட்ட பல்வேறு புகார்கள், தினந்தோறும் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இந்த நிலையில், திருடப்பட்ட அல்லது தொலைந்து போன செல்போன்களை வெகு விரைவில் கண்டுபிடிப்பதற்கான ஒரு புதிய வசதியினை மத்திய அரசு தற்போது அறிமுகம் செய்திருக்கிறது.
அதாவது, CEIR என்கிற தொழில்நுட்பத்தின் உதவியுடன் உங்களது தொலைந்து போன அல்லது திருடப்பட்ட செல்போனை மிக எளிமையாக ட்ராக் செய்து, காவல் துறையின் உதவியுடன் கண்டுபிடிக்கும் படியான ஒரு அமைப்பு உருவாக்கம் செய்யப்பட்டுள்ளது.
FIR நகல்
தொலைந்து போனதாக புகார் அளிக்கப்பட்ட மொபைலின் FIR நகலை, CEIR என்கிற இணைய சேவையில் முதலில் பதிவேற்றம் செய்ய வேண்டும். இதன் பிறகு, தொலைந்து போன மொபைலின் மாடல், IMEI எண், திருடப்பட்ட இடம் மற்றும் செல்போன் எண் ஆகிய அனைத்து விவரங்களையும் அதில் பதிவு செய்ய வேண்டும்.
விவரங்களை பதிவு செய்த 24 மணி நேரத்திற்குள்ளாகவே, மொபைல் போன் ட்ராக் செய்யப்பட்டு, திருடப்பட்ட அல்லது தொலைந்து போன இடத்தில் இருந்து மீட்கப்படும். இதன் பின்னர் சாதாரணமாக மொபைல் போனை அன்லாக் செய்து உபயோகித்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த புதிய வசதி வருகின்ற மே 17 ஆம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளதாகவும் மத்திய அரசு அறிவித்துள்ளது.
மேலும் படிக்க
குளிர்சாதனப் பெட்டியை விடவும் மண்பானை தான் மிகவும் சிறந்தது: ஆனந்த் மஹிந்திரா ட்விட்!
Share your comments