கொரோனா தொற்றுப் பரவலை அடுத்து, இப்போது காற்றை சுத்தமாக்கி கொள்ள, காற்று சுத்திகரிப்பு சாதனங்களான, ‘ஏர் பியூரிபையர்’களை வீடுகளிலும், அலுவலகங்களிலும் அதிகளவில் பயன்படுத்த துவங்கி உள்ளனர். ஆனாலும், சாதாரணமான ஏர் பியூரிபையர்கள், கொரோனா போன்ற கிருமிகளிலிருந்து நம்மை பாதுகாக்க போதுமானதாக இல்லை. இந்நிலையில், அமெரிக்காவைச் சேர்ந்த ‘ஆக்டிவ்பியூர் டெக்னாலஜி’ நிறுவனம், கொரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையிலான, புதிய சாதனங்களை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.
புதிய சாதனங்கள் (New Equipments)
புதிய சாதனங்கள், எல்லாவிதமான இடங்களிலும் உள்ள அனைத்து விதமான நோய்க்கிருமி களையும் விரைவாகத் தேடி அழிக்கும். கிட்டத்தட்ட மூன்றே நிமிடங்களில், 99.9 சதவீத நோய் கிருமிகளை அகற்றிவிடும். ஆக்டிவ் பியூர் டெக்னாலஜி, 500, 2,000 மற்றும் 3,000 சதுர அடி பரப்புகளில் பயன்படுத்த ஏதுவாக, மூன்று சாதனங்களை அறிமுகம் செய்துள்ளது.
நுண்கிருமிகளை அழிக்கும் புதிய சாதனங்களின் வரவால், கொரோனாத் தொற்று பரவல் பலமடங்கு குறைய வாய்ப்புள்ளது. ஆகையால், இந்த புதிய சாதனத்தை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பதை அனைவரும் அறிந்திருக்க வேண்டியது அவசியம்.
கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது. இதற்கு முக்கிய காரணமாக முகக்கவசம் அணிதலும், தடுப்பூசி செலுத்தியதுமே ஆகும். இனி கொரோனா எத்தனை வடிவங்களில் உருமாறினாலும் அதன் பரவலைத் தடுக்க வேண்டியதும் அவசியம்.
மேலும் படிக்க
பூஸ்டர் டோஸ் தடுப்பூசியாக கோவோவாக்ஸ்: 3ம் கட்ட சோதனைக்கு அனுமதி!
12 - 14 வயது சிறார்களுக்கு தடுப்பூசி: மத்திய அமைச்சர் தகவல்!
Share your comments