வேளாண் தொழில்நுட்பத்தில் செய்யப்படும் முதலீடுகள், இந்தியாவின் விவசாய முகத்தையே மாற்றும் என, ஆய்வறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது. இன்றைய காலக் கட்டத்தில் விவசாயத் துறையில் முதலீடு செய்வது அதிகரித்துள்ளதை இந்த ஆய்வறிக்கை சுட்டிக் காட்டுகிறது.
வேளாண் தொழில்நுட்பம் (Agriculture Technology)
ஆஸ்பயர் இம்பாக்ட் எனும் நிறுவனத்தின் ஆய்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
வேளாண் தொழில்நுட்பம் (Agriculture Technology) மற்றும் அது சார்ந்த பிரிவுகளில் 20.40 லட்சம் கோடி ரூபாய் முதலீடுகளை மேற்கொள்வதன் வாயிலாக, 2030ம் ஆண்டில், 60.98 லட்சம் கோடி ரூபாய் வருவாயை இந்தியா ஈட்டலாம்.
மேலும், இதன் வாயிலாக 15.20 கோடி வேலை வாய்ப்புகளையும் (Job) உருவாக்க முடியும்.
நாட்டின் பொருளாதாரத்தில் விவசாயம் பிரதான பங்கு வகித்து வருவதால், வேளாண் தொழில்நுட்பம் மற்றும் அதனுடன் தொடர்புடைய பிரிவுகளில் முதலீடு செய்வது, இந்தியாவின் விவசாய முகத்தை மாற்றுவதாக அமையும்.
கடந்த பத்து ஆண்டுகளில், இந்தியா விவசாய துறையில் 67 ஆயிரத்து, 500 கோடி ரூபாய் அளவுக்கு அன்னிய முதலீடுகளை பெற்றுள்ளது. நடப்பு பத்தாண்டு, இந்திய நிறுவனங்கள், இந்த துறையில் முதலீடு செய்வதற்கான வாய்ப்பை வழங்குவதாக அமைந்துள்ளது என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும் படிக்க
இயற்கை விவசாயத்தை மக்கள் இயக்கமாக மாற்ற வேண்டும்: பிரதமர் மோடி!
வேளாண் விளைபொருள் பட்டியலில் இருந்து பருத்தி நீக்கம்: அதிர்ச்சியில் விவசாயிகள்
Share your comments