1. செய்திகள்

விதை பாதுகாப்பின் அவசியம் குறித்த ISF World Seed மாநாடு நிறைவு!

Muthukrishnan Murugan
Muthukrishnan Murugan
ISF World Seed Congress (credit : ISF (X) )

சர்வதேச விதை கூட்டமைப்பின் முதன்மை நிகழ்வான, ISF World Seed Congress 2024-யினை ISF மற்றும் டச்சு நேஷனல் ஆர்கனைசிங் கமிட்டி (Dutch National Organizing Committee- Plantum) இணைந்து மே 27 முதல் வருகிற மே 29 வரை நெதர்லாந்தின் ரோட்டர்டாமில் மிகச்சிறப்பாக நடத்தி முடித்துள்ளது. கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட சில முக்கிய குறிப்புகள் இப்பகுதியில் தொகுக்கப்பட்டுள்ளது.

சர்வதேச விதை கூட்டமைப்பானது (ISF- International Seed Federation) தொழில்துறை பங்குதாரர்கள் மற்றும் வேளாண் தொடர்புடைய நிறுவனங்களுக்கு இடையேயான வலையமைப்பு உறுதி செய்யும் தளமாக செயல்படுகிறது. இந்த அமைப்பானது, வேளாண் தொடர்பான வர்த்தக வாய்ப்புகளை ஆராய்வதற்கு உதவுகிறது.

ISF -100 வது ஆண்டு விழா:

ISF World Seed Congress 2024-நிகழ்வின் மற்றொரு சிறப்பம்சமாக ISF-யின் 100 வது ஆண்டு விழாவும் கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்வில் கிரிஷி ஜாக்ரனின் நிறுவனரும், தலைமை ஆசிரியருமான எம்.சி.டொம்னிக் பங்கேற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

"அடுத்த நூற்றாண்டிற்கு தயாராகுதல்" (Navigating into the Next Century) என்ற கருப்பொருளின் கீழ், #WorldSeed2024 உணவு தேவை மற்றும் பாதுகாப்பான எதிர்காலத்தை வடிவமைப்பதில் விதைகளின் பங்கு குறித்து மாநாட்டில் தீவிரமாக விவாதிக்கப்பட்டது. துறை சார்ந்த பல நிபுணர்கள் தெரிவித்த கருத்துகளின் தொகுப்பு பின்வருமாறு-

பருவநிலை மாற்றம்- உலகளாவிய பிரச்சினை:

வில்லெம்-அலெக்சாண்டர் (நெதர்லாந்தின் மன்னர்) பேசுகையில், "பெண்களே, தாய்மார்களே, உங்கள் அனைவரையும் இங்கே ரோட்டர்டாமில் பார்ப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். வரவிருக்கும் குறிப்பிடத்தக்க சவால்களைப் பற்றி விவாதிக்க உங்களுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது என்று நம்புகிறேன். பருவநிலை மாற்றம் உலகளாவிய விவசாயிகளுக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளது, வேளாண் தொழிலில் மாற்றங்களை முன்மொழிய வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. சமூகத்தில் என்ன நடக்கிறது என்பதைப் பார்க்க நான் அடிக்கடி விவசாயிகளை சந்திக்கிறேன், நான் எங்கு சென்றாலும் தற்போதைய நிலை குறித்து கேட்கிறேன். விவசாயிகள் இல்லாமல், வளர்ச்சியும் இல்லை, வாழ்க்கையும் இருக்காது, ”என்று தனது உரையில் குறிப்பிட்டார்.

மார்கோ வான் லீவென், (சர்வதேச விதை கூட்டமைப்பின் தலைவர்), உலகளாவிய விதைத் தொழிலை வடிவமைப்பதில் ISF இன் நூற்றாண்டு கால அர்ப்பணிப்பை லீவென் உயர்த்திக் காட்டினார். செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட தொழில்நுட்ப முன்னேற்றங்களின் முக்கியத்துவத்தை அவர் தனது உரையில் வலியுறுத்தினார்.

விதை பாதுகாப்பு என்பது உணவு பாதுகாப்பு:

பெத் பெக்டோல் (FAO துணை இயக்குநர் ஜெனரல்) மாநாடு குறித்து பேசுகையில், காலநிலை நெருக்கடி, பொருளாதார வீழ்ச்சிகள், நாடுகளுக்கிடையேயான மோதல்கள் மற்றும் வளர்ந்து வரும் உலகளாவிய மக்கள் தொகை உள்ளிட்ட அழுத்தமான சவால்களை முன்னிறுத்து பேசினார்.

”விதை பாதுகாப்பு என்பது உணவுப் பாதுகாப்பு என்று நான் கூறுவேன். நாடுகள் தங்கள் வேளாண் உணவு முறைகளை மாற்றியமைக்க உதவும் FAO இன் உறுதிப்பாட்டிற்கு விதைகள் மையமாக உள்ளன. அவை விவசாயிகளுக்கு மிகவும் தேவைப்படும் இடத்தில் உணவைப் பயிரிடவும், உணவு உற்பத்தியை மீண்டும் தொடங்கவும், தன்னிறைவுக்கு வழி வகுக்கவும் உதவுகின்றன,” என்று பெச்டோல் குறிப்பிட்டார்.

Willem-Alexander,Marco van Leeuwen,Michael Keller, Beth Bechdol (from left)

ISF World Seed Congress 2024- வேளாண் துறை சார்ந்து இயங்கி வரும் பல்வேறு நாட்டினை சார்ந்த விஞ்ஞானிகள், ஊடகவியலாளர்கள், விவசாயிகள், வேளாண் தொழில் நிறுவனங்கள் திரளாக கலந்துக் கொண்டனர். இந்த மாநாட்டில் விவாதிக்கப்பட்ட கருப்பொருட்கள், நடப்பாண்டில் வேளாண் பிரச்சினைகளை எதிர்க்கொள்ள சிறந்த வழியினை காட்டியுள்ளதாக நிகழ்வில் பங்கேற்றவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

Read more:

Kisan Call Centre- ஒரே போன் காலில் விவசாய பிரச்சினைகளுக்கு தீர்வு!

கிணறு தோண்ட அரசிடமிருந்து கடனுதவியா? கரும்பு விவசாயி விளக்கம்

English Summary: ISF World Seed Congress 2024 concluded with a focus on the need for seed protection Published on: 01 June 2024, 11:45 IST

Like this article?

Hey! I am Muthukrishnan Murugan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.