மத்திய அரசு ஊழியர்கள் அடுத்த அகவிலைப்படி உயர்வுக்காக ஆவலுடன் காத்திருக்கின்றனர். இந்த சூழலில் அகவிலைப்படி உயர்வு தொடர்பாக இரண்டு முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த முறை அகவிலைப்படி 4% உயர்த்தப்படலாம் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
அகவிலைப்படி உயர்வு
வரும் மார்ச் மாதத்தில் அடுத்த அகவிலைப்படி உயர்வு பற்றிய அறிவிப்பை மத்திய அரசு வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. மார்ச் மாதத்தில் ஹோலி பண்டிகையை முன்னிட்டு அகவிலைப்படி உயர்வுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த முறையை போலவே இந்த முறையும் அகவிலைப்படி 4% உயர்த்தப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தால், மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 42% ஆக அதிகரிக்கும்.
அகவிலைப்படி உயர்வு நடவடிக்கையால் சுமார் 50 லட்சத்துக்கும் மேற்பட்ட மத்திய அரசு ஊழியர்களும், ஓய்வூதியதாரர்களும் பயன் பெறுவார்கள். இதனால் மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பளமும், ஓய்வூதியதாரர்களுக்கு பென்சன் தொகையும் அதிகரிக்கும்.
மேலும் படிக்க
ஃபிக்சட் டெபாசிட் திட்டத்தில் மக்கள் முதலீடு செய்வதன் காரணம் இதுதான்?
பென்சன், LIC, PF பணத்தை இதில் முதலீடு செய்ய மத்திய அரசு திட்டம்!
Share your comments