இந்தியாவின் மத்திய அரசின் கீழ் பணிபுரியும் ரயில்வே துறை ஊழியர்கள் நீண்ட நாட்களாக ரயில்வே வாரியத்திடம் பணி உயர்வு மற்றும் ஊதிய உயர்வு குறித்து கோரிக்கை வைத்து வந்த நிலையில், தற்போது அந்த கோரிக்கைகளுக்கான பதில் அளிக்கப்பட்டுள்ளது.
ஜாக்பாட் அறிவிப்பு
இந்திய ரயில்வே துறையானது நாட்டிலேயே சிறப்பாக செயலாற்றி வரும் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனமாகும். பல லட்சக்கணக்கான ஊழியர்கள் ரயில்வே வாரியத்தின் அனைத்து நிலை பதவிகளிலும் பணி புரிந்து வருகிறார்கள். ரயில்வே வாரியமானது மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வந்தாலும், மத்திய அரசு ஊழியர்களுக்கு அறிவிக்கப்படும் பணி மற்றும் ஊதிய உயர்வு அறிவிப்புகள் ரயில்வே ஊழியர்களுக்கு பொருந்தாது.
மத்திய அரசு ரயில்வே வாரிய ஊழியர்களுக்கு என்று தனியாக வெளியிடும் அறிவிப்புகள் மட்டுமே இவர்களுக்கு பொருந்தும். இந்நிலையில், தகுதி 7,8,9ன் கீழ் மேற்பார்வையாளர் நிலையில் உள்ள ரயில்வே ஊழியர்கள் நீண்ட நாள்களாக பணி மற்றும் ஊதிய உயர்வு குறித்து கோரிக்கை வைத்து வந்தனர்.
தற்போது அவர்களின் கோரிக்கை ஏற்றுக் கொள்ளப்பட்டு பிரிவு 7,8 மற்றும் 9ன் கீழ் உள்ள ஊழியர்களுக்கு தகுதிக்கேற்ப பதவி உயர்வு அளிக்கப்பட உள்ளது. மேலும், மாதம் ரூ.2,500 முதல் ரூ.4,000 வரை ஊதிய உயர்வு அளிக்கவும் மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
மேலும் படிக்க
தமிழ்நாட்டில் பழைய பென்சன் திட்டம் எப்போது வரும்: வேகமெடுக்கும் போராட்டம்!
Share your comments