Jallikattu restrictions
கொரோனாவை தொடர்ந்து ஓமிக்ரான் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் ஜல்லிக்கட்டு போட்டியை பார்வையாளர்கள் இன்றி நடத்த தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. இந்நிலையில், மதுரை அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டிக்கான வாடிவாசல் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெறுகிறது.
மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் தாலுகா, அவனியாபுரத்தில் தை முதல்நாளன்று ஜல்லிக்கட்டு போட்டி சிறப்பாக நடைபெறுவது வழக்கமாகும். இந்நிலையில் இந்தாண்டு நடைபெற உள்ள ஜல்லிக்கட்டு போட்டிக்காக அவனியாபுரம் திருப்பரங்குன்றம் சாலையில், பந்தக்கால் நடப்பட்டது குறிப்பிடதக்கது. இதைத்தொடர்ந்து வாடிவாசல் அமைக்கும் பணி தற்போது தீவிரமடைந்துள்ளது. ஜல்லிக்கட்டு போட்டியில் பங்குகேற்கும் மாடுபிடி வீரர்களுக்கு, அவனியாபுரம் அரசு ஆரம்ப பள்ளியில், இன்னும் சில தினங்களில் மருத்துவப் பரிசோதனை நடைபெறும். கொரோனா பரவல் மற்றும் ஓமிக்ரான் தோற்று அதிகரித்துள்ள நிலையில் தமிழக அரசு பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளதும் குறிப்பிடதக்கது. இந்நிலையில், மதுரை மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுமா என்ற கேள்வி இருந்து வருகிறது.
இந்நிலையில், மதுரை அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டிக்கான பணிகளை மாவட்ட நிர்வாகம் தீவிரமாக மேற்கொண்டிருக்கிறது. இதனால் ஜல்லிக்கட்டு ரசிகர்கள் மகிழ்ச்சி வெள்ளத்தில் உள்ளனர். தமிழகத்தில் கடந்த மே மாதம் உச்சத்தில் இருந்த கொரோனா பாதிப்பு பின்னர் சற்றுகுறைந்திருந்த, நிலையில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. கடந்த வாரம் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தினசரி 600 என்ற அளவுக்கு இருந்தது என்பது குறிப்பிடதக்கது. ஆனால் தமிழகத்தில் கடந்த ஒரு வாரமாக கொரோனா தொற்று பாதிப்பு படிப்படியாக அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதை தொடர்ந்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஜனவரி 10 ஆம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து பல்வேறு கட்டுபாடுகளை விதித்து உத்தரவிட்டுள்ளார்.
அந்த வகையில் தமிழ்நாட்டில்ல புதன்கிழமை (06-01-2022) முதல் இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. கடைகள், வணிக வளாகங்கள், தியேட்டர்கள் 50 சதவீதம் வரை இயங்க அனுமதி அளிக்கப்பட்டிருப்பதும் குறிப்பிடதக்கது. பொங்கல் பண்டிகை நெருங்கி வரும் நேரத்தில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளதால், அரசு மற்றும் தனியாரால் நடத்தப்படும் பொங்கல் மற்றும் கலை விழாக்கள் ஒத்திவைக்கப்படுகிறது என்று தமிழ்நாடு அரசு அறிவித்திருந்தது. இதற்கிடையே கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் ஊரடங்கு பிறபிக்கப்பட்டுள்ள நிலையில் பொங்கலுக்கு ஜல்லிகட்டு போட்டி நடைபெறுமா என்ற கேள்வி எழுந்தது.
இந்த நிலையில் ஜல்லிக்கட்டு போட்டியை பார்வையாளர்கள் இன்றி நடத்த தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. போட்டியில் பங்கேற்பவர்கள் மற்றும் பலர், இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தியவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்ற சில கட்டுப்பாடுகளுடன் ஜல்லிக்கட்டு நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக ஜல்லிக்கட்டு போட்டியில் நாட்டு மாடுகள் மட்டும்தான் அனுமதிக்கப்படும் என அமைச்சர் பி. மூர்த்தி தெரிவித்திருந்தார் குறிப்பிடதக்கது. இதனிடையே மதுரை அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டிக்காக வாடிவாசல் அமைக்கும் பணிகள் ஆரவாரமாக நடைபெற்று வருகிறது.
மேலும் படிக்க:
Share your comments