1. செய்திகள்

மல்லிகைப்பூ விலை உயர்வு: மகிழ்ச்சியில் விவசாயிகள்!

R. Balakrishnan
R. Balakrishnan

Jasmine price hike

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் உள்ள தாண்டம்பாளையம், சிக்கரசம்பாளையம், வடவள்ளி, ராஜன் நகர் உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் சுமார் 1000 ஏக்கர் பரப்பளவில் மல்லிகை பூ, சம்பங்கி, செண்டுமல்லி உள்ளிட்ட பூக்களை சாகுபடி செய்து வருகின்றனர்.

இங்கு பறிக்கப்படும் பூக்கள் சத்தியமங்கலம் மலர்கள் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் மூலம் செயல்படும் பூ மார்க்கெட்டுக்கு கொண்டுவரப்பட்டு விலை நிர்ணயம் செய்யப்படும். அதன் பின்னர் ஈரோடு, கோவை, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கும், அண்டை மாநிலங்களான கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களுக்கும், விமானம் மூலம் வெளிநாடுகளுக்கும் அனுப்பப்படுகிறது.

மல்லிகை பூ (Jasmine)

கடந்த சில நாட்களாக மல்லிகை பூக்களின் விலை கிலோ ஒன்றுக்கு 200 ரூபாய் முதல் 900 ரூபாய் வரை விற்பனையாகி வந்த நிலையில் பூக்களின் வரத்து குறைந்ததன் காரணமாக இன்று சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டில் மல்லிகை பூ விலை உயர்ந்து கிலோ 2100க்கு விற்பனையானது. பூக்களின் விலை உயர்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

சத்தியமங்கலம் மலர் உற்பத்தியாளர் சங்கத்தின் மூலம் செயல்படும் பூ மார்க்கெட்டில் இன்றைய விலை நிலவரம்:

கிலோ ஒன்றுக்கு மல்லிகை பூ 1225 முதல் 2100 ரூபாய்க்கும், முல்லைப்பூ 368 ரூபாய் முதல் 400 ரூபாய்க்கும், காக்கடா 480 முதல் 900 ரூபாய்க்கும், செண்டு மல்லி 38 முதல் 135 ரூபாய்க்கும், கோழிகொண்டை 16 முதல் 88 ரூபாய்க்கும், ஜாதி முல்லை 400 முதல் 500 ரூபாய்க்கும், கனகாம்பரம் 400 ரூபாய்க்கும், சம்பங்கி 90 ரூபாய்க்கும், அரளி 220 ரூபாய்க்கும், துளசி 40 ரூபாய்க்கும், செவ்வந்தி 180 ரூபாய்க்கும் விற்பனையானது.

மேலும் படிக்க

மழை காரணமாக மீண்டும் தக்காளி விலை உயர்வு!

பிறந்த உடனே குழந்தை இறந்தாலும், மகளிருக்கு 60 நாட்கள் சிறப்பு விடுப்பு!

English Summary: Jasmine price hike: farmers happy!

Like this article?

Hey! I am R. Balakrishnan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2025 Krishi Jagran Media Group. All Rights Reserved.