5 சவரனுக்கு மேல் நகை கடன் வாங்கியவர்களிடம் இருந்து தொகைகளை வசூல் செய்ய வேண்டும் என்று அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு மாநிலத் தலைமை வங்கியின் நிர்வாக இயக்குநர் மாநில வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கியின் நிர்வாக இயக்குநர், அனைத்து மத்திய கூட்டுறவு வங்கியின் நிர்வாக இயக்குநர்கள் ஆகியோருக்கு கூட்டுறவு சங்கத்தின் பதிவாளர் அ. சண்முகசுந்தரம் ஒரு கடிதம் எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில், கூட்டுறவு நிறுவனங்களில் 5 சவரனுக்கு மேல் நகைக்கு பதிலாக கடன் வாங்கப்பட்டோரின் விவரங்களை அளிக்குமாறு கூட்டுறவு வங்கிகள் கேட்டுக்கொல்லப்பட்டன.
அதன் அடிப்படையில் விவரங்கள் அனைத்தும் ஆய்வு செய்யப்பட்டன. தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்ட குடும்ப அட்டையில் உள்ள உறுப்பினர்களில் பலர், ஒன்று அல்லது அதற்கு மேல் கூட்டுறவு நிறுவனங்களில் 5 சவரனுக்கு மேலாக நகைக்கடன் வங்கியுள்ளதாக தெரியவந்துள்ளது. மேலும் இந்த அனைத்து விவரங்களும் மாவட்ட வாரியாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
ஆதார் எண் அடிப்படையில் குடும்ப உறுப்பினர்கள் ஒன்று அல்லது அதற்கு மேல் கூட்டுறவு நிறுவங்களில் 5 சவரனுக்கு மேலாக கடன்கள் வாங்கிய நபர்களின் நகைக் கடன்களை வசூல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். கடன்கள் தவணை தவறி இருப்பின் உரிய நடவடிக்கைளை பின்பற்றி கடன் தொகை வசூலிக்கப்பட்ட வேண்டும்.
மேலும் படிக்க:
விவசாயிகளுக்கு மின் இணைப்பு திட்டம் - முதல்வர் இன்று தொடங்கி வைக்கிறார்
Share your comments