Jio 5G
இன்று ரிலையன்ஸ் நிர்வாகத்தின் 45வது ஆண்டு பொதுக் கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் முகேஷ் அம்பானி நாட்டின் வளர்ச்சிக்கு ஜியோ நிறுவனம் முக்கிய செயலாற்றி வருகிறது. ஜியோ வாடிக்கையாளர்கள் ஒவ்வொருவரும் சராசரியாக மாதத்திற்கு 20 ஜிபி டேட்டாவை பயன்படுத்தி வருகிறார்கள்.
ஜியோ 5G (Jio 5G)
தீபாவளி முதல் சென்னை, மும்பை, கொல்கத்தா, டெல்லி ஆகிய நகரங்களில் ஜியோ 5ஜி இணைய சேவை அறிமுகப்படுத்தப்படும் என அறிவித்துள்ளார். ஜியோ 5ஜி உலகிலேயே மிகப் பெரிய மற்றும் அதிநவீன 5ஜி நெட்வொர்க்காக இருக்கும்.
2021ல் 2.32 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்தியா முழுமைக்குமான 5ஜி நெட்வொர்க்கை உருவாக்க ஜியோ ரூ.2000 கோடி முதலீடு செய்கிறது.
மத்திய அரசின் திறமையான மேலாண்மை மற்றும் நடைமுறை, செயல்பாடு இந்தியாவை பொருளாதார நெருக்கடிகளிலிருந்து வளர்ச்சி பாதைக்கு அழைத்துச் செல்ல உதவியது. கொரோனாவிற்கு பிறகு உலகம் முழுவதும் பெரும் பொருளாதார பாதிப்பு நிலவி வருகிறது.
ரிலையன்ஸ் நிறுவனம் ரூ1.88 லட்சம் கோடி வரி செலுத்தியுள்ளது. 5ஜி இணைய சேவை மூலம் தற்போது உள்ள 4ஜி சேவையைவிட 10 மடங்கு வேகத்தில் தரவுகளை விரைவாக பதிவேற்றம் மற்றும் பதிவிறக்கம் செய்ய முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க
உயரப் போகுது டோல் கட்டணம்: வாகன ஓட்டிகள் அதிர்ச்சி!
இவர்களுக்கு மட்டும் 100 Unit இலவச மின்சார திட்டம் தொடரும்: அமைச்சர் முக்கியஅறிவிப்பு!
Share your comments