ஒன்றிய அரசின் பணிகளில் ஆட்களை தேர்வு செய்ய அறிவிப்பு வெளியிடப்பட்டது. 337 பணியிடங்களில் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. காலியிடங்கள் 2065 ஆகும் என்பது குறிப்பிடதக்கது. எஸ்.எஸ்.எல்சி, பிளஸ் 2, பட்டம் மற்றும் அதற்கு மேல் உள்ள கல்வி தகுதி உடையவர்களை விண்ணப்பிக்கலாம். தேர்வு ஆகஸ்ட் மாதம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
வயது 18 முதல் 30 வரை இது பணிகளை பொறுத்து மாறுபடும். உயர்ந்த வயது வரம்பில் SC/ST பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஒபிசி பிரிவினருக்கு மூன்றாண்டுகளும் சலுகை உண்டு. மாற்றுத்திறனாளிகளுக்கு பொது பிரிவில் 10 ஆண்டுகளும், SC/ST 15, OBC 13 ஆண்டுகளும் வயது வரம்பில் சலுகை உண்டு. முன்னாள் படை வீரர்களுக்கு சட்ட ரீதியான சலுகை உண்டு. விதவைகள், விவகரத்து பெற்ற பெண்கள் 35 வயது வரை (எஸ், எஸ்டி 40 வயது வரை) விண்ணப்பிக்கலாம்.
கம்ப்யூட்டர் அடிப்படையில் தேர்வு எழுத வேண்டும். 10ம் வகுப்பு, 12ம் வகுப்பு, பட்டம் ஆகிய தகுதி கொண்டவர்கள் அடிப்படையில் மூன்று தேர்வுகள் நடத்தப்படும். ஜெனரல் அவர்னஸ், குவாண்டிட் டேட்டிவ் ஆப்டிட்டியூட் ஆங்கில மொழி ஆகியவற்றில் இருந்து கேள்விகள் இடம்பெறும் என்பது குறிப்பிடதக்கது. மொத்தம் 200 மதிப்பெண்களுக்கு தேர்வு நடத்தப்படும். ஒரு மணி நேரம், மதிப்பெண் தொடர்பான, மேலும் விபரங்களையும், சிலபஸ் உள்ளிட்ட விபரங்களையும் இணையத்தளத்தில் தெரிந்துக்கொள்ளலாம். இணையதள முகவரி: www.ssc.nic.in. பொது 35 சதவீதம், ஓபிசி, இடபிள்யூஎஸ் 30 சதவீதம், இதர பிரிவுகள் 25 சதவீதம் என்ற அடிப்படையில் மதிப்பெண் பெற்றால் மட்டுமே அடுத்த கட்டத்திற்கு செல்ல இயலும்.
PM-kisan ரூ.2000 அனுப்பியாச்சு- வந்துருச்சான்னு Check பண்ணுங்க!
ABHA : மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட Health Card! எப்படி பெறுவது?
www.ssc.nic.in. என்ற இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம். விண்ணப்பித்த பின்னர் வரும் தேவைக்காக விண்ணப்பத்தைபிரிண்ட் அவுட் எடுத்து பாதுகாக்க வேண்டும். தேர்வுக்கு பின்னர் ஆணையம் கேட்டுக்கொண்டால் தொடர்புடைய ஆவணங்களை சுய உறுதிமொழி எடுத்து, இதனை சமர்பிக்க வேண்டும். கடைசி தேதி ஜுன் 13 இரவு 11 மணி விண்ணப்பத்தைதிருத்திக் கொள்ள ஜூன் 20 முதல் 26 வரை கால அவகாசம் உண்டு என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க:
PM-kisan ரூ.2000 அனுப்பியாச்சு- வந்துருச்சான்னு Check பண்ணுங்க!
Share your comments