இன்று டெல்லியில் உள்ள கிரிஷி ஜாக்ரன் தலைமையகத்தில் அமைந்துள்ள KJ Chaupal-ல் நடைப்பெற்ற அமர்வில் இந்தியாவின் மிகப்பெரிய ஒருங்கிணைந்த தானிய வர்த்தக தளமான Arya.ag-யின் இணை நிறுவனர் பிரசன்னா ராவ் மற்றும் ஆனந்த் சந்திரா ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.
நாட்டின் முன்னணி தானிய வர்த்தக தளங்களில் ஒன்றாக திகழும் Arya.ag-யானது விவசாயிகள் ஒருங்கிணைப்பு, விளைப்பொருள் சேமிப்பு, விவசாயிகள் கடன் தொடர்பான நிதியுதவி மற்றும் சந்தை இணைப்புகளை உள்ளடக்கிய ஒரு ஒருங்கிணைந்த தளமாக விளங்குகிறது. விவசாயிகள் மற்றும் வியாபாரிகளுக்கு இடையேயான இடைவெளியைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. Arya.ag டிஜிட்டல் தளத்தின் மூலம், விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை எப்போது, யாருக்கு விற்க வேண்டும் என்பதை முடிவு செய்ய அதிகாரம் அளிக்கிறது. இதனால் ஒவ்வொரு தானியத்தையும் தேவைக்கேற்ப சேமித்து வைத்து, நல்ல விலைக்கு விற்று பயனடைந்து வருகின்றனர்.
MC டொமினிக்- வரவேற்புரை:
KJ Chaupal-ல் நடைப்பெற்ற அமர்வில் பங்கேற்க வந்த சிறப்பு விருந்தினர்களான பிரசன்னா ராவ் மற்றும் ஆனந்த் சந்திரா ஆகியோரை கிரிஷி ஜாக்ரனின் நிறுவனர் மற்றும் அதன் தலைமை ஆசிரியர் MC டொமினிக் வரவேற்று பேசினார்.
தனது உரையில், "இன்று எங்களுடன் 2 முக்கிய நபர்கள் இருப்பதற்கு பெருமைப்படுகிறோம். அவர்கள் விவசாய சமூகத்தை இடைவிடாமல் ஆதரிக்கின்றனர். நிதி பின்னணியில் இருந்து வந்த அவர்கள், விவசாயத் துறையில் ஒரு புதிய முயற்சியை கையில் எடுத்தது மட்டுமின்றி அதனை ஒரு இலாபகரமான பாதையாகவும் மாற்றி சாதித்துள்ளனர்." என்றார்.
Arya.ag தொடக்கம் எப்படி உருவானது?
Arya.ag-யின் இணை நிறுவனர் பிரசன்னா ராவ் பேசுகையில், "ஆனந்தும் நானும் நிதித்துறையில் பணிபுரியும் போது ஒரே குழுவில் இருந்தோம். விவசாயிகளுக்கு அவர்களின் விவசாய நடவடிக்கைகளுக்கு கடன் கொடுத்தோம்."
"கடன் கொடுப்பவர்களில் பெரும் பகுதியினர் பெரிய வணிகர்கள், பெரிய விவசாயிகள்,பங்குதாரர்கள். விவசாய சமூகத்தின் கணிசமான பகுதியினர் பெரும்பாலும் உண்மையான உற்பத்தியாளர்களாக இருந்தும் பின்தங்கியிருப்பதைக் கண்டு வருத்தமாக இருந்தது."
” இந்நிலையில் தான் இரண்டு அடிப்படை பிரச்சனைகளுக்கு தீர்வு காணக்கூடிய ஒரு சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் எங்களிடம் இருந்தது. பிரச்சினை நம்பர் 1.இந்தியாவில் உள்ள விவசாயிகளுக்கு அறுவடைக்குப் பிறகு எப்போது தங்கள் விளைபொருட்களை விற்க வேண்டும் என்ற தேர்வு இல்லை. பிரச்சினை நம்பர் 2. இந்த விவசாயிகளுக்கு தாங்கள் யாருக்கு விற்க வேண்டும் என்பதைத் தேர்ந்தெடுக்கும் விருப்பம் இல்லை. நாங்கள் இந்த இரண்டு கேள்விகளுடன் தொடங்கினோம், இன்று நாங்கள் இந்த கவலைகளை (சுதந்திரம் மற்றும் தேர்வு) நிவர்த்தி செய்துள்ளோம் என்பதை பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சியடைகிறோம்” என தனது உரையில் குறிப்பிட்டார்.
மேலும் பேசுகையில், "நாங்கள் விவசாயிகளுக்கு போட்டியாளர்கள் அல்ல, அவர்களுக்கு உதவுபவர்கள். விவசாயிகளுக்கு எங்கள் தரப்பில் வழங்கி வரும் மூன்று முக்கிய சலுகைகள்: சேமிப்பு தீர்வுகள், நிதி தீர்வுகள் மற்றும் வர்த்தக தீர்வுகள் மூலம், பண்ணைகள் முதல் சந்தை வரை விவசாயிகளின் பிரச்சினைகளை தீர்க்க வழி செய்கிறோம்” என்றார்.
Read more: Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா?
உள்நாட்டு தயாரிப்புகளுக்கு முக்கியத்துவம்:
Arya.ag இன் நிர்வாக இயக்குநரும் இணை நிறுவனருமான ஆனந்த் சந்திரா உரையாற்றுகையில்,” உள்நாட்டு உற்பத்தியில் நாம் கவனம் செலுத்த வேண்டும் என உறுதியாக கூறுகிறேன். புவியியல் சவால்கள், மக்கள்தொகை சார்ந்த சவால்கள் என காணப்படும் சூழ்நிலையில் இறக்குமதிப் பொருட்கள் அதிகரிப்பை கட்டுப்படுத்த வேண்டும். அதனடிப்படையில் நமது உள்நாட்டு தயாரிப்புகளை அனைவரும் இணைந்து ஊக்குவிக்க வேண்டும்” என்றார்.
நன்றியுரை:
KJ Chaupal-ல் நடைப்பெற்ற அமர்வில் கிரிஷி ஜாக்ரனின் குழு ஆசிரியர் மற்றும் சிஎம்ஓ மம்தா ஜெயின் நன்றியுரை வழங்கினார். அவர் தனது உரையில், “விவசாயிகளுக்கு கற்பிக்க முயற்சிப்பதற்கு பதிலாக, நீங்கள் (பிரசன்னா ராவ் மற்றும் ஆனந்த் சந்திரா) விவசாயிகள் மற்றும் விவசாய சமூகம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை கண்டறிந்து தீர்ப்பதில் கவனம் செலுத்துவதைக் கண்டு நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். விவசாய சமூகத்தை மேம்படுத்தும் நோக்கில் புதுமையான தீர்வுகளை நோக்கி நகரும் உங்கள் பயணத்தைப் பற்றி கேட்பது மகிழ்ச்சியாக இருந்தது." என்றார்.
Read more:
எங்கே போய் முடியுமா? தங்கத்தின் விலை வரலாறு காணாத உச்சம்
கொஞ்சம் மருந்து தெளிச்சாலும் பிரச்சினை தான்- மிளகாய் ஏற்றுமதியில் அசத்தும் இயற்கை விவசாயி
Share your comments