கொடைக்கானல் மலைப் பகுதியில் கொரோனா பொதுமுடக்கத்தால் பாதிக்கப்பட்ட கொய்மலர் சாகுபடி விவசாயிகளுக்கு தோட்டக்கலைத்துறை மானியம் ஒதுக்கீடு செய்துள்ளது. மலர் சாகுபடி விவசாயிகளுக்காக சுமார் 33 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து வழங்கப்பட்டது.
கொய்மலர் சாகுபடி
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் மலைப்பகுதியில் கவுஞ்சி, பூண்டி உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான ஏக்கர்களில் பசுமைக்குடில் அமைத்து கார்னேசன், ஜெஃப்ரா, லில்லியம் போன்ற கொய்மலர்களை விவசாயிகள் சாகுபடி செய்து வெளிநாடுகளுக்கும், வெளிமாநிலங்களுக்கும் ஏற்றுமதி செய்து வருகின்றனர்.
ஊரடங்கால் பாதிப்பு
கொரோனா தொற்று காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் நடைமுறைப்படுத்தப்பட்ட பொதுமுடக்கத்தால் கொய்மலர் சாகுபடி முற்றிலும் பாதிக்கப்பட்டது. மலர்களை நடவு செய்ய முடியாமலும், பரமாரிக்க முடியாமலும் கொடைக்கானல் மலர் சாகுபடி மேற்கொண்ட விவசாயிகள் தலா ரூ.10 லட்சத்திற்கு மேல் பூக்களை விற்க முடியாமல் நஷ்டமடைந்ததாக தெரிவித்துள்ளனர். மேலும் இதுதொடர்பாக தோட்டக்கலைத்துறையிடம் இழப்பீடு கேட்டு மனுவும் அளித்தனர்.
மறுநடவுக்கு ரூ.33 லட்சம் ஒதுக்கீடு
விவசாயிகளின் மனுக்களை ஏற்ற தோட்டக்கலைத்துறை அதிகாரிகள், மலர் சாகுபடி பகுதிகளை ஆய்வு மேற்கொண்டு, விவசாயிகளுக்காக சுமார் 33 லட்சம் ரூபாய் நிது ஒதுக்கீடு செய்தனர். பின்னர், மறுநாற்று நடவு பணிக்களுக்காக அந்த தொகை மானியமாக வழங்கப்பட்டது. இந்த மறுநடவுப் பணிகளை தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர்கள் சீனிவாசன், ஆனந்தன், உதவி இயக்குனர் ரமேஷ், பொறியியல் துறை உதவி பொறியாளர்
சோலார் மின்வேலிக்கு மானியம் அறிவிப்பு! - விவசாயிகளிடமிருந்து விண்ணப்பங்களும் வரவேற்பு!!
கடைகோடி விவசாயிக்கும் நன்மை பயக்கும் "இ-நாம்" எனும் "ஒரே நாடு ஒரே சந்தை" ஆப்!
Share your comments