தென் கொரியாவில் கொரோனாவிலிருந்து தப்பிக்க வெறும் மூக்கை மட்டும் மறைக்கும் முகக்கவசம் ஒன்று அறிமுகமாகி உள்ளது. இதனை கோஸ்க் என்று அழைக்கின்றனர். 2019 ஆம் ஆண்டு சீனாவின் வூஹான் பகுதியிலிருந்து பரவிய கொரோனா, கடந்த 2 வருடங்களுக்கு மேலாக உலகில் ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது. கொரோனா வைரஸுக்கு எதிராக தடுப்பூசிகள் வந்துவிட்டாலும் காமா, டெல்டா, ஒமைக்ரான் என்று அதன் வேற்றுருக்கள் அடுத்தடுத்து தொடர்ந்த வண்ணம் உள்ளன.
மாஸ்க் (Mask)
கொரோனாவிலிருந்து நம்மை முழுவதுமாக காப்பது முகக்கவசமும், தடுப்பூசியும் தான் என்று மருத்துவ வல்லுனர்கள் தொடர்ந்து அறிவுறுத்தி வருகின்றனர். அந்த வகையில் தற்போது மக்களிடம் மாஸ்க் அணியும் பழக்கமும் அதிகரித்து வருவது ஆரோக்கியமான செய்தி.
மாஸ்க்கு பதில் கோஸ்க் (Kosk as an alternative to the mask)
தென்கொரியாவில் அட்மன் என்ற நிறுவனம் புதிய விதமான முகக் கவசத்தை மக்களிடத்தில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய முகக் கவசம் வெறும் மூக்கை மட்டும் மறைக்கும் தன்மை உடையது. இதனால் சாப்பிடுவதற்கு, தண்ணீர் அருவதற்கும் மாஸ்கை அடிக்கடி கழட்ட வேண்டியதில்லை. கொரிய மொழியில் கோ என்றால் மூக்கை குறிக்கும் அதனால் இந்த முகக்கவசத்தை கோஸ்க் என்று அழைக்கின்றனர். மூக்கின் வழியாகவே கொரோனா வைரஸ் வேகமாக பரவும் என்று மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் தற்போது இந்த கோஸ்க் மக்களிடத்தில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
தென் கொரியாவில் ஒமைக்ரான் பரவல் காரணமாக கொரோனா தீவிரமாக பரவி வருகிறது. வியாழக்கிழமை 22,907 பேருக்கு கொரோனா தொற்று உறுதிச் செய்யப்பட்டுள்ளது. கிழக்கு ஆசிய நாடான தென்கொரியா கொரோனாவை இன்றுவரை சிறப்பாகவே கையாண்டுள்ளது. இதுவரை கொரோனாவுக்கு தென்கொரியாவில் 6,812 பேர்வரை பலியாகி உள்ளனர்.
மேலும் படிக்க
மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி கட்டாயம்: சுகாதாரத்துறை அறிவிப்பு!
ஆய்வில் அதிர்ச்சி தகவல்: ஒமைக்ரானை விட வேகமாக பரவும் பி.ஏ., - 2 வைரஸ்!
Share your comments