பொதுவாக நாம் அனைவருக்கும் சேமிப்பு என்பது மிக இன்றியமையாத ஒன்றாக உள்ளது. நம் கடைசி காலக்கட்டத்தில் இந்த சேமிப்பு மிகுந்த பயனுள்ளதாக அமையும். எனவே, பலர் தற்காலத்தில் வங்கியில் சேமிப்புக் கணக்குகளைத் தொடங்கிக் கொண்டு வருகின்றனர். இந்நிலையில் தனியார் வங்கிகளில் ஒன்றான கோட்டக் மஹிந்த்ரா வங்கி (Kottak Mahindra Bank) சேமிப்புக் கணக்குகளுக்கான வட்டி விகிதத்தையும், பிக்சட் டெபாசிட்-க்கான வட்டி விகிதத்தையும் உயர்த்தியுள்ளது.
புதிய வட்டி விகிதங்க்கள் வருகின்ற ஜூன் 13-ஆம் தேதி முதல் அமல்படுத்தப்படுவதாகத் தகவல் வெளி வந்துள்ளது. ஜூன் 8-ஆம் தேதி ரிசர்வ் வங்க்கி ரெப்போ வட்டி விகிதத்தை 4.90% சதவீதமாக உயர்த்துவதாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அந்த அறிவிப்பை அடுத்துப் பல்வேறு வங்கிகள் வட்டியை உயர்த்தி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வரிசையில் தற்பொழுது கோட்டக் மஹிந்த்ரா வங்கியும் தனது வாடிக்கையாளர்களுக்காக வட்டி விகிதத்தை உயர்த்துவதாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
ICICI வங்கியின் FD-இன் வட்டி விகிதம் உயர்வு! விவரம் உள்ளே!!
புதிய வட்டிவிகிதங்கள்
ரூ.50 லட்சம் வரை: 3.5%
ரூ.50 லட்சம்-க்கு மேல்: 5%
ஃபிக்சட் டெபாசிட் (FD) வட்டி விகிதங்கள்
(ரூ. 2 கோடி ரூபாய்க்குள்)
7-14 நாட்கள்: 2.50%
15-30 நாட்கள்: 2.50%
31-45 நாட்கள்: 3.00%
46-90 நாட்கள்: 3.00%
91-120 நாட்கள்: 3.50%
121-179 நாட்கள்: 3.50%
180 நாட்கள்: 4.75%
181-269 நாட்கள்: 4.75%
iPhone 13 Pro Max: ஆப்பிள் ஐபோனுக்கு அதிரடி தள்ளுபடி! ரூ.2500-க்கு ஐபோன்!!
270 நாட்கள்: 4.75%
271-363 நாட்கள்: 4.75%
364 நாட்கள்: 5.25%
365-389 நாட்கள்: 5.50%
390 நாட்கள்: 5.65%
391 நாட்கள் - 23 மாதம் வரை: 5.65%
23 மாதங்கள்: 5.75%
23 மாதம் - 2 ஆண்டுகள்: 5.75%
2 ஆண்டுகள் -3 ஆண்டுகள்: 5.75%
3 ஆண்டுகள் -4 ஆண்டுகள்: 5.90%
4 ஆண்டுகள் -5 ஆண்டுகள்: 5.90%
5 ஆண்டுகள் -10 ஆண்டுகள்: 5.90%
பண மழையில் நனைய ஆசையா?அசத்தலாகக் கைகொடுக்கும் FD!
எனவே சேமிப்பைப் பின்பற்ற விரும்பும் வாடிக்கையாளர்கள் தங்கள் கணக்கைத் தொடங்கி பணத்தினைச் சேமிப்புக் கணக்கிலோ, எஃப்.டி-யிலோ சேமித்துப் பயன்பெறுங்கள்.
மேலும் படிக்க
Share your comments