MFOI சம்ரித் கிசான் உத்சவ் நிகழ்வானது விவசாயிகளின் வருவாயைப் பெருக்குவதையும், வளமான இந்தியாவின் வளர்ச்சிக்கு வேளாண் பங்களிப்பினை உறுதி செய்வதையும் முதன்மை நோக்கமாக கொண்டு இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் கிரிஷி ஜாக்ரன் முன்னெடுப்பில் நடைப்பெற்று வருகிறது. அந்த வகையில், உத்தரப்பிரதேச மாநிலத்தில் நேற்றைய தினம் வெகு விமர்சையாக நடைப்பெற்றது.
உத்தரப்பிரதேச மாநிலம் ஹாபூர் பகுதியில் அமைந்துள்ள வேளாண் அறிவியல் மையத்தில் (KVK), தனுகா அக்ரிடெக் ஆதரவுடன் நடைப்பெற்ற MFOI சம்ரித் கிஷான் உட்சாவ் நிகழ்ச்சியில் பங்கேற்ற வேளாண் வல்லுநர்கள் வருமானத்தை அதிகரிப்பது பற்றிய நுண்ணறிவை விவசாயிகளுடன் பகிர்ந்து கொண்டனர். சுமார் 300-க்கும் மேற்பட்ட விவசாயிகள் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.
மில்லினியர் விவசாயிகள் கௌரவிப்பு:
முற்போக்கு விவசாயியும், சாத்விக் ஃபுட்ஸ் & ஃபார்ம்ஸின் நிறுவனருமான சாந்தனு அத்ரிஷி தான் கடந்து வந்த பாதையினையும், சவால்களை கையாண்ட விதம் குறித்தும் ஆற்றிய உரை விவசாயிகளுக்கு உத்வேகம் அளித்தது. நிகழ்வின் முக்கிய பகுதியாக, முன்னோடி விவசாயிகள் கௌரவிக்கப்பட்டனர்.
அந்த வகையில், பாகர்பூரைச் சேர்ந்த முனேந்தர் சிங், டாடர்பூரை சேர்ந்தவர் அனில் குமார், சிம்ரோலியினை சேர்ந்த அரவிந்த் ஷர்மா மற்றும் உபேடாவைச் சேர்ந்த தீபக் தியாகி உட்பட 15-க்கும் மேற்பட்ட விவசாயிகள் சிறப்பு விருந்தினர்களால் கௌரவிக்கப்பட்டனர்.
நிகழ்வில் நடைப்பெற்ற சிறப்பு அமர்வுகள்:
மேலும் நிகழ்வில், ஹாபூரின் கே.வி.கே.யைச் சேர்ந்த டாக்டர். ஆஷிஷ் தியாகி மற்றும் டாக்டர் நீலம் குமாரி ஆகியோர் முறையே கரும்பில் நோய் மற்றும் பூச்சி மேலாண்மை மற்றும் தினை விவசாயத்தின் நன்மைகள் மற்றும் நுட்பங்கள் போன்ற தலைப்புகளில் விவசாயிகளுக்கு புதிய ஆலோசனைகளையும், அறிவுரைகளையும் வழங்கினர்.
தனுகா அக்ரிடெக் நிறுவனத்தைச் சேர்ந்த ஆர்.கே.துரியா மற்றும் பிற வேளாண் அறிவியல் நிபுணர்களும் பயிர் பராமரிப்பு மற்றும் தோட்டக்கலை பயிர்களில் நோய் மற்றும் பூச்சி மேலாண்மை போன்ற தலைப்புகளின் கீழ் மதிப்புமிக்க நுண்ணறிவுகளை விவசாயிகளுக்கு வழங்கினர்.
மஹிந்திரா டிராக்டர் நிறுவனம், உத்திரபிரதேசத்தில் உள்ள ஹபூரில் உள்ள விவசாயிகளின் வளர்ச்சிக்கு ஆதரவளிப்பதில் தங்கள் அர்ப்பணிப்பை வெளிப்படுத்தும் வகையில், மஹிந்திரா ஓஜா, மஹிந்திரா டிஐ எக்ஸ்பி பிளஸ் போன்ற தனது சமீபத்திய டிராக்டர்களை நிகழ்வில் காட்சிப்படுத்தியிருந்தது.
இந்தியா முழுவதுமுள்ள விவசாயிகளை சிறப்பிக்கும் நிகழ்வாக சமீபத்தில் வெற்றிக்கரமாக நடைப்பெற்று முடிந்த, MFOI 2023 விருது நிகழ்வினைத் தொடர்ந்து, நடப்பாண்டிற்கான நிகழ்வுக்கு (MFOI Awards 2024) பரிந்துரை, மற்றும் விண்ணப்பங்கள் விவசாயிகளிடமிருந்து வரவேற்கப்படுகிறது. தகுதியான நபர்கள் கீழ்காணும் லிங்க் மூலம் விருதுக்கு விண்ணப்பிக்கலாம். இந்த ஆண்டு சுமார் 100-க்கும் மேற்பட்ட பிரிவுகளின் கீழ் விருது வழங்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.
Read more:
ஒரே நேரத்தில் 6 வரிசையில் நெல் நடவு- மஹிந்திராவின் 6 RO Paddy Walker சிறப்பம்சம்!
இருக்கிற கொஞ்ச இடத்திலும் காட்டு நெல்லி- முள் சீத்தா என பயிரிட்டு கலக்கும் பிஸியோதெரபி மருத்துவர்!
Share your comments