ஒடிசா மாநிலம் பாலாசூர் கருடா மைதானத்தில் கிருஷி சன்யந்திர மேளாவின் இரண்டாம் நாள் நிகழ்வு இன்று வெற்றிகரமாக நடைப்பெற்றது. இன்றைய தினம் விவசாயத்துறையில் சிறப்பாக பங்காற்றிய 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கௌரவிக்கப்பட்டனர்.
ஒடிசாவின் பாலசோரில் உள்ள கருடா மைதானத்தில் நேற்று ”க்ரிஷி சன்யந்த்ரா மேளா 2023” ஒன்றிய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால் உற்பத்தித் துறை அமைச்சர் பர்ஷோத்தம் ரூபாலா, பாலாசோர் எம்பி, பிரதாப் சந்திர சாரங்கி, எஸ்பிஐ மேலாளர் (LHO), துருவா சரண் பாலா ஆகியோர் முன்னிலையில் தொடங்கியது, ஒன்றிய விவசாயம் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் காணொளி வாயிலாக நிகழ்வில் பங்கேற்றார்.
கிருஷி சன்யந்திர மேளா இரண்டாம் நாள் நிகழ்வு இன்று நடைப்பெற்றது. முதல் அமர்வில் சிறந்த விவசாய இயந்திரங்கள் மற்றும் உபகரணங்களின் விவரங்கள் குறித்த விழிப்புணர்வு நிகழ்வு STIHL/SANY இண்டஸ்ட்ரீஸால் நடத்தப்பட்டது. இரண்டாவது அமர்வை வாவ் மோட்டார்ஸ்/வேர் எனர்ஜிஸ் கிசான் நடத்தியது. மேலும், இந்நிகழ்வின் போது விவசாயத்துறையில் சிறப்பாக பங்கேற்றி மற்ற விவசாயிகளுக்கு முன்னுதாரணமாக விளங்கிய 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கௌரவிக்கப்பட்டனர்.
மேளாவின் சிறப்பம்சம்:
விவசாயிகள் நவீன விவசாய முறைகள் பற்றிய அறிவையும் நுண்ணறிவையும் பெற இந்த கண்காட்சி ஒரு சிறந்த வாய்ப்பாகும். பல விவசாய தொழில் முதலீட்டாளர்கள் புதிய விவசாய உபகரணங்கள், உரங்கள் மற்றும் விதைகளை காட்சிப்படுத்தும் ஸ்டால்களை அமைத்துள்ளனர். மேலும், வேளாண் துறையின் பல்வேறு துறைகளைச் சேர்ந்த வல்லுநர்கள் கலந்து கொண்டு தங்களது ஆலோசனைகளை வழங்குவதோடு, விவசாயிகளுடன் தங்களது அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ள உள்ளனர்.
OUAT புவனேஸ்வரில் உள்ள வேளாண்மைக் கல்லூரியின் டீன் பேராசிரியர் எச்.கே.பத்ரா, மூத்த விஞ்ஞானி மற்றும் கே.வி.கே பாலசோரின் தலைவருமான டாக்டர். ஸ்வகாதிகா சாஹு, மூத்த விஞ்ஞானியும் கே.வி.கே. பத்ரக் தலைவருமான டாக்டர். அரவிந்த் தாஸ் மற்றும் டாக்டர். பாட்னாக் சங்கமித்ரா உட்பட பல முக்கிய நபர்கள் இன்று பங்கேற்றனர்.
விவசாயிகளின் பாராட்டு விழாவிற்கு பின்னர், நிலையான விவசாய நடைமுறைகள் மற்றும் தொழில்நுட்பத்தின் மூலம் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவதற்கான வழிகள் குறித்து விவாதிக்க குழு விவாதமும் நடைபெற்றது. விவசாயிகள் தங்கள் வருமானத்தை மேம்படுத்தவும், நிலையான விவசாயத்தை உறுதிப்படுத்தவும் பின்பற்றக்கூடிய பல்வேறு முறைகள் மற்றும் உத்திகள் குறித்து வெளிச்சம் போட்டுக் காட்டும் வகையில் இந்த கலந்துரையாடல் மிகவும் தகவலறிந்ததாகவும், அறிவூட்டுவதாகவும் இருந்தது என பங்கேற்ற விவசாயிகள் கருத்து தெரிவித்தனர்.
இன்றைய நாளின் பிற்பகுதியில், டிராக்டர் பராமரிப்பு தொடர்பான மூன்றாவது தொழில்நுட்ப அமர்வு கந்தர் எண்ணெய் நிறுவனத்தால் நடத்தப்பட்டது. ஒடிசாவின் விவசாயம் மற்றும் அதனுடன் தொடர்புடைய துறைகளை ஊக்குவித்தல் மற்றும் பாலசோர் மாவட்டத்தின் விவசாயத் துறையில் மேலும் வளர்ச்சியை உந்துதல் ஆகியவை இன்றைய திட்டத்தின் முதன்மையான நோக்கமாகும். வேளாண் விஞ்ஞானிகள், பொறியாளர்கள் மற்றும் அதிகாரிகள் உட்பட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாயிகள் பாலசோரில் நடைப்பெற்ற கண்காட்சியில் குவிந்துள்ளனர்.
விவசாயிகள் மற்றும் விவசாய நிபுணர்கள் ஒன்றிணைந்து புதிய தொழில்நுட்பங்கள், சிறந்த நடைமுறைகள் மற்றும் பிற வளர்ந்து வரும் போக்குகளைப் பற்றி விவாதிக்க ஒரு தளத்தை வழங்குவதன் மூலம், நேர்மறை மாற்றத்தை ஊக்குவிப்பதோடு, விவசாயத் துறையில் வளர்ச்சிக்கான புதிய வாய்ப்புகளை உருவாக்குவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது இந்த கிருஷி சன்யந்திர மேளா.
மேலும் காண்க:
இந்த 6 பூச்சி மருந்தை பயன்படுத்தாதீங்க- விவசாயிகளுக்கு ஆட்சியர் கோரிக்கை
சூடான காஃபியுடன் தேங்காய் எண்ணெய் கலந்து அருந்தலாமா? கூடாதா?
Share your comments