1. செய்திகள்

அரசின் பசுமை சாம்பியன் விருது- விண்ணப்பிக்க கடைசித் தேதி அறிவிப்பு!

Muthukrishnan Murugan
Muthukrishnan Murugan

Tamilnadu govt Green Champion Award

2023 ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு அரசின் பசுமை சாம்பியன் விருது பெற தகுதியுள்ள நபர்கள் மற்றும் நிறுவனங்கள், அமைப்புகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது என திண்டுக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., தகவல் வெளியிட்டுள்ளார்.

தமிழக சுற்றுச்சூழல் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் 03.09.2021 அன்று சுற்றுச்சூழல் பாதுகாப்பு முன்மாதிரியான பங்களிப்பை வழங்கும் தனிநபர்கள் மற்றும் நிறவனங்களுக்கு “பசுமை சாம்பியன் விருது” வழங்கப்படும் என சட்டப்பேரவையில் அறிவித்தார்.

பரிசுத்தொகை எவ்வளவு?

அமைச்சரின் அறிவிப்பினைத் தொடர்ந்து, 2021-2022 நிதியாண்டு முதல் ரூ.1/- கோடி செலவில் பசுமை சாம்பியன் விருது வழங்கும் நடைமுறை செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் பசுமை சாம்பியன் விருதுக்கு 100 நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட தனிநபர்கள் / அமைப்புகளுக்கு விருதுடன் தலா ரூ.1,00,000/- வீதம் பண முடிப்பும் வழங்கப்படும்.

தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் (TNPCB) இந்த அறிவிப்பின்படி, 2023-24 ஆம் ஆண்டிற்கான பசுமை சாம்பியன் விருதுகளை வழங்க முன்மொழிந்துள்ள பட்டியல் விவரம் பின்வருமாறு.

  • சுற்றுச்சூழல் கல்வி மற்றும் பயிற்சி,
  • சுற்றுச்சூழல் விழிப்புணர்வு,
  • சுற்றுச்சூழல் பாதுகாப்பு,
  • பசுமை தயாரிப்புகள் / பசுமை தொழில்நுட்பம் தொடர்பான விஞ்ஞான ஆய்வுகள்,
  • நிலைத்தகு வளர்ச்சி,
  • திடக்கழிவு மேலாண்மை, நீர் மேலாண்மை மற்றும் நீர் நிலைகள் பாதுகாப்பு,
  • காலநிலை மாற்றத்திற்கு உட்படுதல் மற்றும் தணிப்பு நடவடிக்கை,
  • காற்று மாசு குறைத்தல்,
  • பிளாஸ்டிக் கழிவுகளின் மறுசுழற்சி மற்றும் கட்டுப்பாடு நடவடிக்கை,
  • சுற்றுச்சூழல் மறுசீரமைப்பு மற்றும் பாதுகாப்பு,
  • கடற்கரை பாதுகாப்பு நடவடிக்கை,
  • பிற பிளாஸ்டிக் கழிவு தொடர்பான திட்டங்கள்

ஆகிய தலைப்புகளில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வை சிறப்பாக செயல்படுத்திய நிறுவனங்கள்/கல்வி நிறுவனங்கள்/ குடியிருப்போர் நல சங்கங்கள்/ தனி நபர்கள்/ உள்ளாட்சி அமைப்புகள் / தொழிற்சாலைகளுக்கு பசுமை சாம்பியன் விருது வழங்கப்படும்.

தேர்ந்தெடுக்கும் முறை எப்படி?

தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம், மாவட்ட ஆட்சியரின் தலைமையில் அமைக்கப்பட்ட பசுமை சாம்பியன் விருது தேர்வு செய்யும் குழு மூலம் தகுதி வாய்ந்த 100 தனி நபர்கள் / நிறுவனங்களை ஒவ்வொரு வருடமும் தேர்வு செய்யும். இதற்கான விண்ணப்ப படிவம் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரிய வலைதளத்தில் (www.tnpcb.gov.in) பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பசுமை சாம்பியன் விருதுக்கு விண்ணப்பிக்க 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் 15 ஆம் நாள் கடைசி நாள் ஆகும்.

கூடுதல் தகவல்கள் தேவைப்படுவோர் திண்டுக்கல் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளரை 8056042218 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., தெரிவித்துள்ளார்.

Read also:

மீன் வளர்ப்பில் ஈடுபட ஆர்வமா? அரசின் 5 மானியத்திட்டங்கள் உங்களுக்காக

வருகை நாட்கள் அடிப்படையில் போக்குவரத்து அரசு ஊழியர்களுக்கு சாதனை ஊக்கத்தொகை அறிவிப்பு!

English Summary: Last date announced to apply for Tamilnadu Green Champion Award

Like this article?

Hey! I am Muthukrishnan Murugan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2025 Krishi Jagran Media Group. All Rights Reserved.