மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான, எல்.ஐ.சி.நிறுவனத்தில் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ‘அப்ரண்டிஸ் டெவலப்மெண்ட் ஆபீசர் (ADO)’ பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. விருப்பமுள்ள பட்டதாரிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்க படுகின்றன.
பணி விவரங்கள்
பணியிடம்: இந்தியா முழுவதும்
நிறுவனம்: எல்ஐசி
அமைப்பு: மத்திய அரசு
பதவி: Apprentice Development Officer (ADO)
காலியிடங்கள்: 8,581
தென்மண்டல காலியிடங்கள்: 1,257
மாத சம்பளம்: 34,503 ரூபாய்
கல்வி தகுதி: பட்டப்படிப்பு, மேலாண்மை படித்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது.
வயது வரம்பு: 21-30. குறிப்பிட்ட பிரிவினருக்கு வயது வரம்பில் தளர்வு உண்டு.
முன் அனுபவம்: 2 வருட முன் அனுபவம் தேவை.
விண்ணப்பக் கட்டணம்: எஸ்/எஸ்டி பிரிவினருக்கு 50 ரூபாய். இதர பிரிவினருக்கு 600 ரூபாய்.
முக்கிய தேதிகள்
அறிவிக்கை நாள்: 20 மே 2019
விண்ணப்பப் பதிவு தொடங்கும் நாள்: 20 மே 2019
விண்ணப்பிக்க கடைசி நாள்: 9 ஜூன் 2019
விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதற்கான கடைசி நாள்: 9 ஜூன் 2019
ஆன்லைன் தேர்வுக்கான நுழைவுச்சீட்டு வழங்கப்படும் நாள்: 29 ஜூன் முதல்
முதல்நிலை தேர்வு தேதி: 6 & 13 ஜூலை 2019
மெயின் தேர்வு நடக்கும் தேதி: 10 ஆகஸ்ட் 2019
தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்க https://www.licindia.in/Bottom-Links/careers என்ற பக்கததில் சென்று இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்கும் போது விண்ணப்பதாரர்கள் தங்களுடைய அனைத்து விபரங்களை சரியாக பதிவு செய்ய வேண்டும்.
K.SAKTHIPRIYA
KRISHIJAGRAN
Share your comments