1. செய்திகள்

LIC IPO: மே 4ஆம் தேதி வெளியிட வாய்ப்பு!

Deiva Bindhiya
Deiva Bindhiya
LIC IPO: May 4 will release!

எல்ஐசி நிறுவனத்தின் ஐபிஓ எனப்படும் பொதுப் பங்கு வெளியீடு மே 4ஆம் தேதி நடைபெறும் என தகவல் வெளியாகி உள்ளது. மே 12ஆம் தேதி இறுதி தேதி என்பதால் பங்கு வெளியீட்டை நடத்த முடிவெடுக்கப்பட்டு இருப்பது குறிப்பிடதக்கது.

முன்பே, இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை இன்சூரன்ஸ் நிறுவனமான எல்ஐசி நிறுவனத்தின் பங்குகளை விற்பனை செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. எல்ஐசியில் 5% பங்குகளை விற்று ரூ.78,000 கோடி நிதி திரட்ட மத்திய அரசு திட்டமிட்டிருப்பதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மொத்தம் ரூ 31.6 கோடி பங்குகள் விற்கப்படும் எனத் தகவல்கள் வெளியாகி வருகின்றன.

இதில் 50% நிறுவன முதலீட்டாளர்களுக்கும், 35% சில்லறை முதலீட்டாளர்களுக்கும், 10% எல்ஐசி பாலிசிதாரர்களுக்கும் ஒதுக்கப்பட இருப்பதாகவும், 5% தள்ளுபடி வழங்கவும் திட்டமிட்டிருப்பதாக குறிப்பிடப்படுகிறது.

ஒவ்வொரு பங்கும் ரூ.10 முகமதிப்பு கொண்டிருக்கும். மொத்தம் 31.62 கோடி பங்குகள் விற்பனை செய்யப்படும் எனத் தெரியவந்துள்ளது. இதில் ஊழியர்களுக்கு 5 சதவீதமும், தனிநபர் காப்பீடுதாரர்களுக்கு 10 சதவீதமும் ஒதுக்கீடு செய்யப்படும் எனவும் தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

காயான பிறகு பூவாவது எது? பழமான பிறகு காயாவது எது?

பங்குச் சந்தை கட்டுப்பாட்டு வாரியமான செபியிடம் பங்குகள் விற்பனை தொடர்பான வரைவு அறிக்கையை (DRHP LIC) தாக்கல் செய்துள்ளது. பொதுப் பங்கு வெளியீட்டு தேதி மார்ச் 31-ம் தேதியாக இருக்கலாம் என முதலில் தகவல் வெளியானது என்பதும் குறிப்பிடதக்கது.

எனினும், உக்ரைன் - ரஷ்யா போர் மூண்டதால் பங்குச் சந்தைகள் கடுமையாகச் சரிந்து, ஒரே நாளில் தங்கம் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்தது என்பதும் குறிப்பிடதக்கது. இதையடுத்து, பங்கு விற்பனை தள்ளிப்போனது, பங்குச்சந்தை ஏற்ற - இறக்கமாக இருப்பதன் காரணமாக எல்ஐசியின் பங்கு வெளியீடு பாதிக்கப்படக் கூடும் என்பதால் மத்திய அரசு பங்கு வெளியீட்டை தாமதித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

100 ரூபாய் நாணயமாக அறிமுகம்: ஏன்?

அதேசமயம் SEBIயிடம் சமர்பித்த அறிக்கையின்படி, மே 12-ம் தேதிக்குள் LIC பங்கு விற்பனையை தொடங்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் பொதுபங்கு வெளியீடு, மே 4-ம் தேதி தொடங்கி, மே.9 தேதி வரை நடைபெறும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

மேலும் படிக்க:

BOI Recruitment 2022: அரிய வேலைவாய்ப்பு, 89,890 வரை சம்பளம்

கொடைக்காலத்திற்கு ஏற்ற மரவள்ளி கிழங்கு ஸ்நாக்ஸ்

English Summary: LIC IPO: May 4 will release! Published on: 26 April 2022, 12:04 IST

Like this article?

Hey! I am Deiva Bindhiya. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.