1. செய்திகள்

Live Update: 124ஆவது மலர் கண்காட்சியை துவக்கி வைக்கிறார் மு.க.ஸ்டாலின்!

Deiva Bindhiya
Deiva Bindhiya
Live Update: 124th Flower Show! Launched by MK Stalin

மலைகளின் அரசி என்றழைக்கப்படும் உதகையில் ஆண்டுதோறும் ஏப்ரல், மே மாதங்களில் கோடை காலத்தில் அதிகளவு சுற்றுலாப் பயணிகள் வருகை தருவர். சுற்றுலாப் பயணிகள், பொதுமக்கள் கண்டு ரசிக்க உதகை அரசு தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சி ஏற்பாடு செய்யப்படும் என்பது குறிப்பிடதக்கது. அந்த வகையில் இன்று, இந்த மலர் கண்காட்சியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்து, பார்வையிட்டு வருகிறார்.

கொரோனா பரவல் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக மலர் கண்காட்சிக்கு பொதுமக்கள் அனுமதிக்கப்படவில்லை. இந்நிலையில் இந்தாண்டு நடைபெறும் 124ஆவது மலர் கண்காட்சிக்காக முதற்கட்டமாக தாவரவியல் பூங்காவில் 275 வகையான 5.5 லட்சம் மலர் நாற்றுகளை நடவுசெய்துள்ளனர். இந்தப் பணியை வனத் துறை அமைச்சர் கா. ராமசந்திரன், உதகை சட்டப்பேரவை உறுப்பினர் கணேஷ், மாவட்ட ஆட்சியர் அம்ரித் ஆகியோர் கடந்த ஜனவரி மாதம் மேற்பார்வையிட்டனர். அதனைத் தொடர்ந்து பூங்கா ஊழியர்கள் பெட்டோனியா, சால்வியா, மேரிகோல்ட், பேன்சி உள்ளிட்ட 275 வகையான மலர் நாற்றுகளை நட்டனர் என்பது குறிப்பிடதக்கது.

விவசாய கடன் வழங்கும் இந்திய வங்கிகள் - ஓர் பார்வை!

அலங்கார மேடைகளில் வைக்கப்படும் 35 ஆயிரம் மலர்த் தொட்டிகளிலும் நாற்றுகள் நடப்பட்டுள்ளன. இந்த நாற்றுகள் வளர்ந்து பூத்து குலுங்கும் அழகை காண பார்வையாளர்கள் குவிவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தாண்டு மலர் கண்காட்சிக்குப் பொதுமக்களுக்கு அனுமதி அளிக்கப்பட வேண்டும் எனச் சுற்றுலாப் பயணிகள் கோரிக்கைவைத்திருந்தனர். இன்று நடைபெறும், இந்த மலர் கண்காட்சியைத் தொடங்கிவைக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகை தந்திருப்பது கூடுதல் பெருமை சேர்த்திருக்கிறது, என்பது குறிப்பிடதக்கது.

கிசான் ரத் செயலி: விளைப்பொருட்களை கொண்டு செல்ல உதவும்

இன்று துவங்கிய, இந்த மலர் கண்காட்சி வரும் 5 நாட்கள் நடைபெறும் என்பது குறிப்பிடதக்கது. பூத்து குலுங்கும் மலர்களைக் கொண்டு பல விதமான வடிவங்கள் மற்றும் சிறப்பங்கள் உருவாக்கி பார்வையாளர்களை கவரும் வண்ணம் அமைத்துள்ளனர் என்பது, இந்த மலர் கண்காட்சி சிறப்பாகும்.

நீலகிரி மாவட்டத்தில் இன்று 124வது மலர் கண்காட்சியை முன்னிட்டு உள்ளூர் விடுமுறையும் அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து மாநில அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்களுக்கு இன்றைய தினம் விடுமுறை அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதை ஈடுசெய்ய 4ம் தேதி நீலகிரி மாவட்டத்திற்கு பணி நாளாகவும்  அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடதக்கது.

மேலும் படிக்க:

State Bank: 2வது முறையாக உயர்ந்த வட்டி விகிதம்! விவரம் உள்ளே!

ஓட்டுநர் உரிமம் பறிமுதல் செய்ய RTO-க்கு அதிகாரம் கிடையாது

English Summary: Live Update: 124th Flower Show! Launched by MK Stalin Published on: 20 May 2022, 11:07 IST

Like this article?

Hey! I am Deiva Bindhiya. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.