20 ஜூலை 2022, மிகப்பெரிய டிராக்டர் விருது விழாவை காண நாடே காத்திருக்கிறது. இந்திய டிராக்டர் ஆஃப் தி இயர் 2022 என்பது டிராக்டர் நிறுவனங்களின் கடின உழைப்பு மற்றும் முயற்சிகளைப் பாராட்டும் நோக்குடன், ஒரு புதுமையான யோசனையாகும். வருடாந்திர விருது வழங்கும் விழா 20 ஜூலை 2022 அன்று புல்மேன் ஏரோசிட்டி ஹோட்டலில் நடைபெறவுள்ளது, இவ்விழா நான்கு மணியளவில் துவங்கியது.
கடந்த 2019 தொடங்கப்பட்ட ITOTY என்ற அழைக்கப்படும் Indian Tractor of the Year ஒவ்வொரு ஆண்டும் சிறந்த டிராக்டர் தயாரிப்புகளுக்கு விருது வழங்கிச் சிறப்பித்து வருகின்றது. கடந்த ஆண்டு 2021-ற்கான Indian Tractor of the Year விருது சோனாலிகா டைகர் 55- க்கு வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நடப்பு ஆண்டிற்கான விருது விழா இன்று நடைபெற்று வருகிறது.
புதுதில்லியில் நடைபெற்று வரும் இந்த மாபெரும் விழாவில் கிரிஷி ஜாக்ரனின் நிறுவனரும் முதன்மை ஆசிரியருமான திரு எம்.சி. டாமனிக் மற்றும் கிரிஷி ஜாக்ரன் குழுவினரும் கலந்துகொண்டுள்ளனர்.
இந்நிகழ்வின் தொடக்க உரையினை கே டிராக்டர் ஜக்ஷன் உடைய நிறுவனர் திரு. அனிமேஷ் அஹர்வால் தொடங்கிவைத்தார்.
சிறந்த டிராக்டராக under 20 ho- vst 171 தேர்வு செய்யப்பட்டுள்ளது.
டிராக்டர் சந்திப்பின் இணை நிறுவனர் அனிமேஷ் அகர்வால், ITOTY 2022 விருதுகளைக் குறித்துப் பேசி வருகிறார்.
அடுத்ததாகச் சிறந்த டிராக்டர் என சிவராஜ் டிராக்டர் (Siwaraj Tractor) அறிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்ததாக Kubota best title 40-50hp சிறப்பு செய்யப்படுகிறது.
New Holland 46-50hp சிறப்பு செய்யப்படுகிறது.
above-60 hp- mahindra novo 755 Di சிறப்பு செய்யப்படுகிறது.
நிபுணர்கள் குழுவானது டிராக்டர் வல்லுநர்கள் குறித்து தொழில்துறையில் தங்களுடைய கருத்துக்களைப் பகிர்ந்து கொள்கிறார்கள்.
விவசாயத்தில் சிறந்த டிராக்டர் Farmtrack வழங்கப்படுகிறது.
ஓர்சர்டு டிராக்டர் விருது சோனாலிகா -வுக்கு வழங்கப்படுகிறது.
வேகமாக வளர்ந்துவரு டிராக்டர் நிறுவனத்துக்கான விருதுகள் மஹிந்திரா டிராக்டர் மற்றும் ஸ்வராஞ் டிராக்டருக்கு வழங்கப்படுகிறது.
இந்தியன் டிராக்டர் ஆஃப் தி இயர் 2022 விருது Mahindra 575 DI XP Plus மற்றும் Massey Fergussion 246 -க்கு வழங்கப்படுகிறது.
ITOTY 2022 Award நிகழ்வில் கலந்துகொண்டதற்காகக் கிரிஷி ஜாக்ரனின் நிறுவனரும் தலைமை ஆசிரியருமான திரு. டாமனிக் அவர்களுக்கு நினைவுப் பரிசினை வழங்கிச் சிறப்பித்தது, ITOTY.
மேலும் படிக்க
அரசு ஊழியர்களுக்கு குட் நியூஸ்! இனி வீட்டிலிருந்தே வேலை செய்யலாம்!!
வேளாண் செய்திகள்: விவசாய இடுபொருள் வாங்க ரூ. 1 கோடி ஒதுக்கீடு
Share your comments