கடந்த மார்ச் மாதம் முதல் மக்களை வாட்டி வதைத்து வருகிறது கொரோனா. அச்சத்தில் சிக்கி, தொழில் முடக்கத்தால், வருமானம் இழந்து, மனபலம் இழந்து மக்கள் தவித்து வருகின்றனர்.
அவ்வாறு பாதிக்கப்பட்ட மக்களை ஊக்குவிக்கும் வகையில் தமிழக அரசு கொண்டுவந்துள்ளத் திட்டமே கொரோனா ஊரகப் புத்தாக்கத் திட்டம்(TNRTP). இதன்படி கொரோனா சிறப்பு நிதியுதவி தொகுப்பு (CAP)அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
உலக வங்கியின் உதவியுடன் செயல்படுத்தப்படும் இந்தத் திட்டம், அரியலூர், தர்மபுரி, கன்னியாகுமரி,பெரம்பலூர், தஞ்சாவூர் மற்றும் சென்னை தவிர்த்து 30 மாவட்டங்களில், 3994 கிராம ஊராட்சிகளில், செயல்படுத்தப்படுகிறது.
CAP
கோவிட் -19 தொற்று நோய் பரவல் காரணமாக ஏற்பட்ட ஊரகத் தொழில் முடக்கத்தை சீரமைக்கும் நோக்கத்துடன் ஏற்படுத்தப்பட்ட திட்டம் தான் கொரோனா சிறப்பு நிதியுதவி (CAP).
நோக்கம் (Concept)
கொரோனா பொதுமுடக்கத்தால் மீண்டும் தொழிலில் ஈடுபட முடியாத அல்லது குறைந்த அளவில் மட்டுமே தொழிலை நடத்த முனைப்பவர்களுக்கு நிதியுதவி வழங்கப்படும்.
குறிக்கோள் (Target)
கிராமங்களில் உள்ள தனிநபர் தொழில்முனைவோருக்கும், தொழில் கூட்டமைப்புகளுக்கும் நிதியுதவி வழங்கி, உள்ளூர் பொருளாதாரத்தை மீட்டெடுப்பதே இத்திட்டத்தின் குறிக்கோள்.
சிறப்பு அம்சங்கள் (Features)
-
தனிநபர் தொழில்முனைவோருக்கான உற்பத்தி மூலதன நிதி
-
உற்பத்தியாளர் குழுவிற்கான மூலதன மானியம்
-
தொழில் குழுவிற்கு மூலதன நிதி
-
உற்பத்தியாளர் கூட்டமைப்பு/உழவர் - உற்பத்தியாளர் நிறுவனத்திற்கு மூலதன மானியம்
-
தனிநபர் தொழில்முனைவோருக்கான (மாற்றுத் திறனாளிகள்/ நலிவுற்றோர்)உற்பத்தி மூலதன நிதி /வாழ்வாதார நிதி
கால வரையறை (Time Limit)
திட்ட அறிவிப்பு வெளியிடப்பட்ட ஜூன் முதல் ஆறு மாதம் வரை. அதாவது ஜூனில் இருந்து டிசம்பர் வரை.
தனிநபர் தொழில்முனைவோர்
தனிநபர் அல்லது ஒன்றுக்கு மேற்பட்டவர்களால் துவங்கப்பட்ட குறு மற்றும் நுண் தொழில்கள் இத்திட்டத்தில் தனிநபர் தொழில்முனைவோர் கீழ்வரும் அளவீடுகள் மூலம் வரையறுக்கப்படுகிறது.
-
மூதலீடு அளவு ( நுண் : 5 லட்சம் வரை குறு : 5-15 லட்சம் வரை)
-
வருவாய் ( நுண் : 5-15 லட்சங்கள் குறு: 25-50 லட்சம்)
-
வேலைவாய்ப்பு ( நுண் - 1+ குறு : 10+)
இது ஊராட்சி அளவில் தொழில்முனைவோருக்கு ஏற்பட்டிருக்கும் நிதிப்பற்றாக்குறையை சீரமைக்கும் நோக்கத்துடன் ஒரு முறை மட்டுமே வழங்கப்படும் குறுகிய கால நிதி உதவியாகும்.
பெறுவது எப்படி? (How to get)
சுயஉதவிக்குழு உறுப்பினராக அல்லது சுயஉதவிக்குழு உறுப்பினரின் குடும்பத்தில் உள்ள வேளாண்/ வேளாண் சார்ந்த/ வேளாண் அல்லாத தொழில் முனைவோருக்கு குறுகிய கால நிதியுதவியாக ரூபாய் 50,000 வரை உற்பத்தி மூலதன நிதிவழங்கப்படும். ஏற்கனவே செயல்பாட்டில் உள்ள குறு/நுண் தனி நபர் தொழில்கள்மட்டுமே விண்ணப்பிக்கலாம்.
கடனை எப்படி செலுத்துவது? (Repayment)
தனிநபர்கள் அதிகப்பட்சமாக 39 மாத தவணைகளில் தொகையை சுய உதவிக் குழுவிற்கு செலுத்த வேண்டும்.
நிதியதவி (Fund)
-
உற்பத்தியாளர் குழு ஒன்றுக்கு ரூபாய் 1,50,000 வரை மூலதன மானியம் வழங்கப்படும்.
-
தனிநபர் ஒருவருக்கு கிராம வறுமை ஒழிப்புச் சங்கம் மூலம் ரூபாய் 20,000 வரை நிதியுதவி வழங்கப்படும்.
புலம்பெயர்ந்த இளைஞர்கள்
ஒரே மாநிலத்திலிருந்து, வெளி மாநிலத்திலிருந்து அல்லது வெளிநாடுகளிலிருந்து சொந்த ஊர் திரும்பிய தொழில் முனைவோராக / தொழில் தொடங்க எண்ணம் உள்ள இளைஞர்கள் நிதியுதவி வழங்கப்படும். தனிநபருக்கும் ரூ.1 லட்சம் வரை நிதியுதவி வழங்கப்படும்.
யாரை அணுகுவது? (Contact)
தமிழ்நாடு ஊரக புத்தாக்கத் திட்டத்தின் மாவட்ட நிர்வாக உறுப்பினர்/ வட்டாரஅளவிலான ஊழியர்கள்/ சுய உதவிக் குழுக்கள்/ ஊராட்சி அளவிலான கூட்டமைப்பை அணுகி பயனாளியாக விண்ணப்பத்திற்கான தகுதிகளைதெரிந்துக்கொள்ளலாம்.
மேலும் விபரங்களுக்கு
முதன்மை செயலாக்க அலுவலர்
தமிழ்நாடு ஊரக புத்தாக்கத் திட்டம்.
இரண்டாவது தளம், அன்னை தெரசா
மகளிர் வளாகம்,
வள்ளுவர் கோட்டம் நெடுஞ்சாலை.
நுங்கம்பாக்கம், சென்னை - 600 034
மாவட்ட நிர்வாக அலுவலர்,
தமிழ்நாடு ஊரக புத்தாக்கத் திட்டம்
வட்டார அணித் தலைவர்,
தமிழ்நாடு ஊரக புத்தாக்கத் திட்டம்.
மேலும் படிக்க...
ஓய்வூதியம் வேண்டுமா..? ரூ.55- ரூ.200 செலுத்தி மாதம் ரூ.3000 பெற்றிடுங்கள்!!
ஹெக்டேருக்கு ரூ.2,500 வழங்கும் தமிழக அரசின் திட்டம் -பெறுவதற்கான வழிமுறைகைள்!
Share your comments