1. செய்திகள்

வட்டியே இல்லாமல் ரூ. 60 ஆயிரம் வரை கடன்: அவசர தேவைக்கு உதவும் Paytm!!

T. Vigneshwaran
T. Vigneshwaran
Paytm

0% வட்டிக்கு 60000 ரூபாய் வரை கடனை வழங்க Paytm: இப்போது வாங்கவும், பின்னர் செலுத்தவும் என்ற திட்டத்தின் கீழ் புதிய சேவை ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது பேடிஎம் நிறுவனம்.

போஸ்ட்பெய்ட் மினி என்று வழங்கப்படும் இந்த சேவை, வாடிக்கையாளர்களுக்கு சிறிய அளவிலான கடன்களை வழங்க முடிவு செய்துள்ளது. ஆதித்யா பிர்லா ஃபினான்ஸ் லிமிட்டட் நிறுவனத்துடன் கூட்டாக இணைந்து இந்த கடன் வழங்கும் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது பேடிஎம்.

இதன் மூலம் வாடிக்கையாளர்கள் தங்களின் குடும்ப செலவுகளை பார்த்துக்கொள்ளமுடியும். போன் ரீச்சார்ஜ் முதல், டிடிஎச் ரீசார்ஜ், சிலிண்டர் புக்கிங், மின்சார கட்டணம், குடிநீர் கட்டணம் ஆகியவற்றையும் செலுத்துக் கொள்ள எளிய வழியாகும்.

ரூ. 60 ஆயிரம் உடனடிக் கடன் வழங்குவது மட்டுமல்லாமல் ரூ. 250 முதல் ரூ. 1000 வரையிலான கடன்களையும் பெற்றுக் கொள்ளலாம். மேலும் பேடிஎம் மாலில் தங்களுக்கு தேவையான பொருட்களையும்  வாங்கிக் கொள்ள வாடிக்கையாளர்களுக்கு இந்த கடன் திட்டம் பெரிதும் உதவியாக இருக்கும்.

"இந்த போஸ்ட்பெய்ட் திட்டத்தின் மூலம் நுகர்வுகள் அதிகரிக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கின்றோம். மேலும் புதிய சேவை வாடிக்கையாளர்களுக்கு அவர்களின் பில்களை செலுத்த பெரிய வகையில் உதவிகரமானதாக இருக்கும் என்று இந்த நிறுவனத்தின் தலைமை செயல் இயக்குநர் பாவேஷ் குப்தா அறிவித்துள்ளார்.

இந்த சலுகை தற்போது தமிழகம், கர்நாடகா, கேரளா, ஆந்திரம், மற்றும் தெலுங்கானாவில் உள்ள 200 மாவட்டங்களில் மட்டும் செயல்பாட்டிற்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க:

சிறிய LPG சிலிண்டர் புக் செய்ய சான்று தேவையில்லை

மரணத்தைப் பரிசளிக்கும் குரங்கு பி வைரஸ்- சீனாவில் மருத்துவர் பலியானதால் அச்சம்!

English Summary: Loan up to Rs.60 thousand: Paytm to help with an emergency !! Published on: 19 July 2021, 09:34 IST

Like this article?

Hey! I am T. Vigneshwaran. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2025 Krishi Jagran Media Group. All Rights Reserved.
News Hub