வாங்கியக் கடனைத் திரும்ப செலுத்து முன்வரும்போது, நமக்கு பெரும் சுமையாக, இடையில் நந்திபோல நிற்பது என்பது வட்டிதான்.
இந்த வட்டியை மாதம் தோறும் செலுத்தத் தவறும்பட்சத்தில், பெருந்தொகையை வட்டி, அதுபோடும் குட்டி ஆகியவற்றுடன் சேர்த்துக் கட்ட வேண்டியிருக்கும். இதனால்தான் கடனாளிகள் மேலும், மேலும் கடன்காரர்களாக மாறும் சூழல் உருவாகிறது.
ஆனால் இவ்வாறு வட்டி கட்டமுடியாமல் சிரமப்படுபவர்களுக்கு வட்டி இல்லாமல் கடன் கொடுக்கும் வசதியை ஏற்படுத்தியுள்ளது பொபி குவிக் ஆப் (Bobby Quick App).
மொபி குவிக் ஆப் (Bobby Quick App) மூலமாக வட்டியே இல்லாமல் ரூ.10,000 வரையில் கடன் வாங்கலாம்.அது எப்படி என்று இங்கே பார்க்கலாம்.
இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் பரிவர்த்தனை மொபைல் செயலியான மொபி குவிக் (Bobby Quick App) தனது வாடிக்கையாளர்களுக்கு வட்டியில்லா கடன் திட்டத்தை அறிவித்துள்ளது. இதற்காக ஹோம் கிரெடிட் குரூப் நிறுவனத்துடன் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.
ஹோம் கிரெடிட் மனி என்ற (Home Credit Money)இந்தத் திட்டத்தின் கீழ் வாடிக்கையாளர்கள் ரூ.1,500 முதல் ரூ.10,000 வரையில் வட்டியே இல்லாமல் கடன் பெறலாம். இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பித்தால் கடன் தொகை நேரடியாக வாடிக்கையாளரின் வங்கிக் கணக்கிலேயே டெபாசிட் (Deposit) செய்யப்படும். எங்கும் அலையத் தேவையில்லை. வங்கிக் கிளைகளிலும் மணிக் கணக்கில் காத்துக்கிடக்க வேண்டியதில்லை.
3 மாதம் அவகாசம் (3 Months Time)
-
இந்தத் திட்டத்தின் கீழ் நீங்கள் வாங்கும் கடனை மூன்று மாத காலத்தில் திருப்பிச் செலுத்த வேண்டும்.
-
வட்டியில்லா கடன் என்றாலும் கடன் செயல்பாட்டுக் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும்.
-
ரூ.4,999 வரையிலான கடன்களுக்கு செயல்பாட்டுக் கட்டணம் ரூ.299. அதேபோல, ரூ.5,000 முதல் ரூ.10,000 வரையிலான கடன்களுக்கு செயல்பாட்டுக் கட்டணம் ரூ.599 என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
-
உதாரணமாக, நீங்கள் இத்திட்டத்தின் கீழ் 3,000 ரூபாய் கடன் வாங்குவதாக இருந்தால் அதை மூன்று மாதங்களுக்கு ரூ.1,000 என்ற வீதம் என்ற அளவில் கட்ட வேண்டும்.
-
இதற்கான செயல்பாட்டுக் கட்டணம் ரூ.299. எனவே நீங்கள் மூன்று மாதங்களில் திருப்பிச் செலுத்தும் தொகை ரூ.3,299 ஆகும். இதில் வட்டி எதுவும் இல்லை.
-
இந்தியாவில் கடன் சேவைகளை வாடிக்கையாளர்களுக்குத் தொடர்ந்து வழங்க விரும்புவதாகவும், 100 கோடி இந்தியர்களுக்கு தங்களது சேவையை எடுத்துச் செல்வதாகவும் மொபி குவிக் நிறுவனம் தெரிவித்துள்ளது.
கொரோனா வந்தபிறகு, நாட்டு மக்கள் அனைவருக்கும் பணத் தேவை அதிகரித்துள்ளது. இக்கட்டான சமயங்களில் வங்கிகளுக்கு நேரடியாகச் சென்று உடனடியாகக் கடன் பெறுவது கடினமாக இருப்பதால் இதுபோன்ற உடனடிக் கடன் திட்டங்களை எதிர்நோக்கியுள்ளனர்.
இதில் வட்டியில்லாக் கடன் போன்ற சலுகைகளை அறிவித்து வாடிக்கையாளர்களைக் கவரும் முயற்சியில் மொபி குவிக் போன்ற நிறுவனங்களும் ஈடுபட்டு வருகின்றன.
மேலும் படிக்க...
தொடர் மழை எதிரொலி-உப்பு விலை உயரும் அபாயம்!
PM Kisan திட்டத்தில் விதிகள் மாற்றம் - விண்ணப்பதாரரின் பெயரில் நிலம் இருக்க வேண்டியது கட்டாயம்!
விவசாயிகளின் குறையை தீர்க்க ஆவண செய்யப்படும்! - பிரதமர் நரேந்திர மோடி பேச்சு!
Share your comments