1. செய்திகள்

தமிழ்நாட்டில் மீண்டும் ஊரடங்கா- விஜயகாந்த் கூற்று

T. Vigneshwaran
T. Vigneshwaran

தளர்வுகளில் அலட்சியம் காட்டினால் மீண்டும் ஊரடங்கு செயல்பாட்டுக்கு வரும் வாய்ப்பிருப்பதாக தேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்த் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் மக்களுக்கு அறிவுறுத்தல்

மக்கள் அனைவரும் விழிப்புணர்வுடனும் கவனமாகவும் இருக்க வேண்டும்.

கட்டாயமாக தடுப்பூசி பற்றாக்குறையைப் போக்க அரசுகள் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

முகக்கவசம் அணிந்து மற்றும் சமூக இடைவெளியை கடைபிடிக்கவேண்டும் மற்றும் அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என்று மக்களுக்கு அறிவுறுத்தினார்.

தமிழ்நாட்டில் கொரோனாவின் இரண்டாவது அலையை கட்டுக்குள் கொண்டு வரப்பட்ட ஊரடங்கு கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், பொதுமக்கள் ஊரடங்கு தளர்வுகளை எச்சரிக்கையாக கையாளவேனும் வேண்டும் என்று தேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்த் மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஊரடங்கு உத்தரவுகள் அறிவிக்கப்பட்டுள்ளதால்  வணிக வளாகங்கள், வழிபாட்டுத் தலங்கள்,போன்ற பகுதிகளில் மக்கள் அதிகம் கூடாமல் இருப்பது நல்லது. மேலும், முகக்கவசம் அணிந்து அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ளவேண்டும் வேண்டும். பாதுகாப்பு நடைமுறைகளைக் கடைப்பிடிக்காமல் அலட்சியமாக இருந்தால் கொரோனா தொற்றின் மூன்றாவது அலை, டெல்டா பிளஸ்,மற்றும் கருப்புப் பூஞ்சை போன்ற தொற்று நோய்கள் அதிக அளவில் பரவி பாதிப்பை ஏற்படுத்த  வாய்ப்பு உள்ளது என்று கேட்டுக்கொண்டார்.

போதிய அளவில் தடுப்பூசிகள் இன்றி மக்கள் பாதிக்கப்படுவதைக் கவனத்தில் கொண்டு தடுப்பூசி பற்றாக்குறையைப் போக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் விஜயகாந்த் வலியுறுத்தினார்.

மேலும் தளர்வுகளில் அலட்சியமாக இருந்தால்  உடல்நலம் பாதிக்கப்பட்டு உயிர்ச் சேதம் ஏற்படுவதுடன், மீண்டும் ஊரடங்கு தொடர்ந்து, தொழில் முடங்கி, வேலை வாய்ப்பின்றி வருமானம் இழந்து மிகப்பெரிய ஒரு பிரச்சினையை மக்கள் எதிர்கொள்ளவேண்டிய சூழல் ஏற்படக்கூடும். எனவே, தொற்றில் இருந்து நம்மைப் பாதுகாத்துக்கொள்ள மக்கள் அனைவரும் விழிப்புணர்வுடனும் கவனத்துடனும் இருக்க வேண்டும். அதுவே வீட்டுக்கும் நாட்டுக்கும் நல்லது” என்று அறிக்கை வெளியிட்டார்.

மேலும் படிக்க:

ஒரே நாடு, ஒரே ரேஷன் திட்டம் - ஜூலை 31ம் தேதிக்குள் அமல்படுத்த உச்சநீதிமன்றம் உத்தரவு!!

தமிழ்நாட்டில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 1,000 ரூபாய் வழங்கும் வாக்குறுதி

கண்டம் விட்டு கண்டம் பாயும் அக்னி பி ஏவுகணையின் சோதனை வெற்றி

English Summary: Lockdown again in Tamil Nadu - Vijayakanth speech Published on: 29 June 2021, 02:08 IST

Like this article?

Hey! I am T. Vigneshwaran. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.