புதிய ரேஷன் கார்டுகளை பயனாளிகளின் வீட்டுக்கேக் கொண்டுசென்று டேலிவரி செய்ய அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக, கார்டுகளுக்கு அஞ்சலில் அனுப்பும் திட்டத்தை செயல்படுத்த ஒப்புதல் அளித்து, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
ரேஷன் அட்டைத் திட்டம் என்பது அப்பாவி ஏழை மக்களின் பசியைப் போக்க வேண்டும் என்பதற்காகக் கொண்டுவந்த திட்டம். இருப்பினும்
தமிழகத்தைப் பொருத்தவரை, ரேஷன் அட்டை மட்டுமே, நாம் இந்த மாநிலத்தில் வசிப்போர் என்பதற்கான அடையாளமாகவேப் பார்க்கப்படுகிறது.
நுகர்வோர் இந்த ரேஷன் அட்டையைப் பெறுவதற்கு ஏதுவாக, தமிழக அரசின் உணவு வழங்கல் துறை சார்பில், புதிய ரேஷன் கார்டுகள் வழங்கப்படுகின்றன.
பெறுவது எப்படி?
இதற்கு, உணவு வழங்கல் துறையின் அதிகாரபூர்வ இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். அதை பரிசீலித்து, உணவு வழங்கல் உதவி ஆணையர்கள் மற்றும் வட்ட வழங்கல் அதிகாரிகள் ஆய்வு செய்து, புதிய ரேஷன் கார்டுக்கு ஒப்புதல் அளிப்பர். அச்சிடப்பட்ட கார்டு சம்பந்தப்பட்ட அலுவலகங்களுக்கு அனுப்பி, பயனாளிகளிடம் ஒப்படைக்கப்படுகிறது.
புகார்கள்
அலுவலகங்களில் வேண்டுமென்றே ரேஷன் கார்டு வழங்க தாமதம் செய்யப்படுவதாக புகார்கள் எழுந்தன. இதனால் அச்சிடப்பட்ட ரேஷன் கார்டை, பயனாளிகளின் வீடுகளுக்கு அஞ்சலில் அனுப்ப முடிவு செய்யப்பட்டது. அத்திட்டத்தை செயல்படுத்த அரசிடம், உணவு வழங்கல் துறை அனுமதி கேட்டது. அதை பரிசீலித்த அரசு ஒப்புதல் வழங்கி உத்தரவிட்டுள்ளது.
கட்டணம்
அதன்படி, ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்கும் போது, அஞ்சலில் அதை பெற விரும்புவோர், அஞ்சல் கட்டணமாக, 25 ரூபாயை இணையதளம் வாயிலாகவே செலுத்த வேண்டும். நகல் கார்டுக்கு, 20 ரூபாய் கட்டணமும், அஞ்சல் கட்டணத்திற்கு, 25 ரூபாய் என, மொத்தம், 45 ரூபாய் கட்டணம் செலுத்தவேண்டும்.
மேலும் படிக்க...
Share your comments