1. செய்திகள்

பெர்சனல் லோன் வாங்க போறீங்களா? எந்த வங்கியில் எவ்வளவு வட்டி?

R. Balakrishnan
R. Balakrishnan
Personal Loan

இந்தியாவில் உள்ள பெரும்பாலான வங்கிகள் மக்களின் அவசர தேவைக்கு தனிநபர் கடன் வழங்கி வருகிறது. சிலர் நெருக்கடியான கடனை அடைப்பதற்கு அல்லது ஏதாவது ஒரு பொருள் வாங்குவதற்கு பெர்சனல் லோன் வாங்குகின்றனர். பெர்சனல் லோன் வாங்குவதற்கு ஏராளமான காரணங்கள் உள்ளது. வங்கிகளில் பெர்சனல் லோன் வாங்குவது மிகவும் சுலபமானது தான்.

ஒருவர் வாங்க கூடிய சம்பளம்,வருமானம் மற்றும் கடன் மதிப்பீடு ஆகியவற்றைப் பொருத்தே உடனடியாக கடன் வழங்கப்படுகிறது. அவ்வாறு கடன் வாங்க வேண்டும் என்று முடிவு செய்து விட்டால் எந்த வங்கியில் கடன் வாங்கலாம் என்ற சந்தேகம் பலருக்கும் இருக்கும்.

பெர்சனல் லோன் (Personal Loan)

வங்கிக் கணக்கு வைத்திருக்கும் அதே வங்கியில் தான் கடன் வாங்க வேண்டும் என்ற அவசியம் எதுவும் கிடையாது. மற்ற வங்கிகளில் பெர்சனல் லோன்க்கு எவ்வளவு வட்டி மற்றும் சலுகைகள் உள்ளது என்று, அனைத்தையும் ஒப்பிட்டுப் பார்த்து தான் கடன் வாங்க வேண்டும்.

தற்போதைய நிலவரப்படி எந்தெந்த வங்கிகள் எவ்வளவு வட்டி நடைமுறையில் கடனை வழங்குகின்றன என்பதை தெரிந்து கொண்டு நீங்கள் கடன் வாங்கிக் கொள்ளலாம்.

வட்டி விகிதம் (Interest Rate)

HDFC வங்கி = 10.5% - 21.00%

யெஸ் பேங்க் = 10.99% - 16.99%

சிட்டி பேங்க் = 9.99% - 16.49%

கோடக் மஹிந்திரா வங்கி = 10.25%

ஆக்சிஸ் வங்கி = 12% - 21%

இந்தஸ் இந்த் வங்கி = 10.49% - 31.50%

HSBC வங்கி = 9.50% - 15.25%

IDFC முதல் வங்கி = 10.49%

உஜ்ஜீவன் சிறு நிதி வங்கி = 11.49% - 16.49%

பாரத ஸ்டேட் வங்கி = 9.60% - 15.65%

கர்நாடக வங்கி = 12% - 17%

பேங்க் ஆஃப் பரோடா = 10.50% - 12.50%

பெடரல் வங்கி = 10.49% - 17.99%

பேங்க் ஆஃப் இந்தியா = 10.35% - 12.35%

ஐடிபிஐ வங்கி = 8.15% - 10.90%

கரூர் வைஸ்யா வங்கி = 9.40% - 19.00%

சவுத் இந்தியன் வங்கி = 10.60% - 18.10

இந்தியன் ஓவர்சீஸ் வங்கி = 9.30% - 10.80%

RBL வங்கி = 14% - 23%

பஞ்சாப் நேஷனல் வங்கி = 7.90%

மகாராஷ்டிரா வங்கி = 9.45% - 12.80%

சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா = 9.85%

சிட்டி யூனியன் வங்கி = 12.75%

ஜே&கே வங்கி = 10.80%

மேலும் படிக்க

எஸ்பிஐ வங்கியில் வட்டி விகிதம் அதிகரிப்பு: அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்!

கூடுதல் வட்டி! அதிக லாபம்: பிக்ஸ்ட் டெபாசிட் ஒரு வரபிரசாதம்!

English Summary: Looking to buy a personal loan? How much interest in which bank? Published on: 04 June 2022, 06:03 IST

Like this article?

Hey! I am R. Balakrishnan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.