தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளதார மேம்பாட்டுக் கழகம் (டாம்கோ) சார்பில், மாநிலத்தில் பொருளாதாரத்தில் பின்தங்கிய சிறுபான்மை இனத்தை சேர்ந்த கைவினைக் கலைஞர்களுக்கு விராசாட் திட்டத்தில், கைவினைப் பொருட்கள் செய்யப் பயன்படும் மூலப் பொருட்கள், கருவிகள், எந்திரங்கள் வாங்க மிகக் குறைந்த வட்டியில், கடனுதவி வழங்கப்படுகிறது.
தனிநபர் கடன் திட்டத்தில், திட்டம்-1-ன் படி கடனுதவி பெற ஆண்டு வருமான வரம்பு கிராமமாக இருப்பின், ரூ.98 ஆயிரமும், நகரமாக இருப்பின, ரூ.1 லட்சத்து 20 ஆயிரத்துக்கு உள்ளும் இருக்க வேண்டும். ஆண் 5 சதவீதம், பெண் 4 சதவீத வட்டியில் அதிகபட்சமாக ரூ.10 லட்சம் வரை கடன் பெறலாம்.
தவணைத் தொகை வட்டியுடன் திரும்ப செலுத்த வேண்டிய காலம் 5 ஆண்டுகள், அதிகபட்சம் 60 தவணைகள் ஆகும். தனிநபர் கடன் திட்டங்களில், திட்டம்-2-ன் கீழ் கடன் உதவி பெற ஆண்டு வருமான வரம்பு கிராமப்புறம் மற்றும் நகாப்புறம் ரூ.8,லட்சத்துக்கு மேல் இருப்பின், ஆண் 6 சதவீதம், பெண் 5சதவீதம் வட்டியில் அதிகபட்சமாக ரூ.10 லட்சம் வரை கடன் பெறலாம். தவணைத் தொகை வட்டியுடன் திரும்பசெலுத்த வேண்டிய காலம் 5 ஆண்டுகள், அதிகபட்சம் 60 தவணைகள் ஆகும்.
கடன் பெற இணைக்கப்பட வேண்டிய ஆவணங்கள்:
சாதிச்சான்றிதழ், வருமான சான்றிதழ் நகல், குடும்ப அட்டை, இருப்பிடச்சான்று நகல், கடன் பெறுவதற்கான தொழில் குறித்த விவரம், திட்ட அறிக்கை, ஆதார் அட்டை நகல், கூட்டுறவு வங்கி கோரும் இதர ஆவணங்கள், பாஸ்போர்ட் புகைப்படம்-3. கடன் விண்ணப்பப் படிவங்கள் பின்வரும் அலுவலகங்களில் இருந்து விலையில்லாமல் பெற்றுக் கொள்ளலாம்.
மேலும் படிக்க:
Share your comments