கடந்த புரட்டாசி பட்டத்தில் சாகுபடி செய்த தக்காளி (Tomato) மழையால் அழிந்தது. எனவே, தக்காளி விலை வரலாறு காணாத அளவு உயர்ந்தது. ஒரு கிலோ, 100 முதல் 180 ரூபாய்க்கு விற்பனையானது. இதனால் பொதுமக்கள் தக்காளி வாங்க முடியாமல் தவித்து வந்தனர்.
தக்காளி சாகுபடி (Tomato Cultivation)
விலை உயர்ந்த போதிலும் விளைச்சல் இல்லாததால் விவசாயிகள் பயன் அடைய முடியவில்லை. இந்நிலையில், கார்த்திகைப் பட்டத்தில் விவசாயிகள் தக்காளி சாகுபடி செய்தனர். அவை தற்போது காய்ப்புக்கு வரத் துவங்கியுள்ளது. வெளியூர் வரத்தும் அதிகரித்துள்ளது.
இதனால், தக்காளி விலை கிடுகிடுவென சரிந்துள்ளது. ஒரு வாரத்திற்கு முன், 13 கிலோ கொண்ட ஒரு டிப்பர், 800 ரூபாய்க்கும், இரண்டு நாட்களுக்கு முன், 500 ரூபாய்க்கும், நேற்று, 350 ரூபாய்க்கும் விலை போனது.
குறைந்தது விலை (Price reduced)
இன்னும் இரண்டு வாரத்தில் அறுவடை சீசன் களைகட்டும். வரும் நாட்களில் தக்காளி வரத்து மேலும் அதிகரிக்கும். எனவே, பொங்கலுக்குப் பின் மேலும் விலை சரியும் வாய்ப்பு உள்ளது.
மேலும் படிக்க
தமிழக காய்கறிகள் நேரடி கொள்முதல்: கேரள அரசு புதிய திட்டம்!
தக்காளியை பச்சையாக சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகள் கிடைக்குமா?
Share your comments