பத்து ரூபாய்க்கு மதிய சாப்பாடு வழங்க தனது ரசிகர் மன்றம் மூலம் நடிகர் கார்த்தி ஏற்பாடு செய்துள்ளார். உழவன் பவுண்டேஷன் என்ற அமைப்பை கார்த்தி நடத்தி வருகிறார். சிறந்த விவசாயிகளை தேர்வு செய்து அவர்களுக்கு விருது வழங்குவது. பழங்கால விதைகளை சேகரித்து வைப்பது, ஊர்ப்புறங்களில் கால்வாய் மற்றும் நீர்நிலைகளைப் பராமரிப்பது உள்ளிட்ட சமூக பணிகளை, இந்த அமைப்பு செய்து வருகிறது
இந்நிலையில் சென்னையில் வளசரவாக்கம் பகுதியில் ரூ. 10க்கு மதிய சாப்பாடு வழங்கும் பணியையும் நடிகர் கார்த்தி தனது கார்த்தி மக்கள் நல மன்றம் மூலம் தொடங்கி வைத்துள்ளார்.
தினமும் 100 பேருக்கு இதன் மூலமாக சாப்பாடு வழங்கப்படுகிறது. 'தொழிலாளர்களை மனதில் வைத்து தான், இந்த சாப்பாடு வழங்கப்படுகிறது, அதற்காக இலவசமாக வழங்கக்கூடாது என்பதற்காக பத்து ரூபாய் வசூலிக்கிறோம். ரூ. 50க்கான தரத்துடன், இந்த உணவு இருக்கிறது. இந்த திட்டத்தை விரிவுப்படுத்தவும் யோசித்துள்ளோம்' என கார்த்தி மக்கள் நல மன்றத்தினர் தெரிவித்தனர்.
நடிகர் கார்த்தி, விவசாயம் சார்ந்த படத்தில் நடிப்பதில், அதிக ஆர்வம் காட்டி வருகிறார். சமீபத்தில் வெளியான சுல்தான் படத்தில், அவரது நடிப்பு பெரும் வரவேற்ப்பை பெற்றது. விவசாயம் செய்பவர்களின் நிலத்தை அபகரிக்க நினைப்போரை வெளுத்து வாங்கிய சுல்தானாக நடிகர் கார்த்தியின் நடிப்பு, அசத்தலாக இருந்தது. மேலும் நம் அனைவரும் அறிந்த கடைக்குட்டி சிங்கம் படத்தைப் பற்றி சொல்லவே வேண்டாம். ஐந்து அக்காகளுக்கு, கடைசித் தம்பியாக மற்றும் ஒரு விவசாயியாக, மாடுகளை தனது சகோதரராக நினைக்கும் கதாப்பாத்திரத்திற்கு உயிர் கொடுத்த கார்த்தியின் நடிப்பு பாராட்டுக்குறியது அல்லவா?
செய்திகள் : நமோ டேப்லெட் யோஜனா 2022: ரூ. 1000த்திற்கு பிரண்டட் டேப்லட், விண்ணப்பிக்க வேண்டுமா?
மேலும், அவர் ஒரு நடிகராக மட்டுமில்லாமல் சமூக ஆர்வலராகவும் வளம் வருவது, நம்மில் பலருக்கு தெரியாது. அந்த வகையில், அவரது ரசிகர்கள் மூலம் அவர் அறிவித்திருக்கும், இந்த 10 ரூபாய் சாப்பாடு நல்ல வரவேற்ப்பை பெரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க: 2022-23 பட்ஜெட்டில் : தோட்டக்கலைத் துறைக்கு வந்த சோதனை!
Share your comments