OneWeb India-2 திட்டத்தில் 36 செயற்கைக்கோளுடன் எல்.வி.எம்-III ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டதாக இஸ்ரோ தலைவர் தெரிவித்துள்ளார்.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) சார்பில் ஆந்திரப் பிரதேசத்தின் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து 36 செயற்கைக்கோள்களுடன் இந்தியாவின் மிகப்பெரிய ஏவுகணையான LVM-III (LVM3) ராக்கெட்டானது OneWeb India-2 திட்டத்தில் ஞாயிற்றுக்கிழமையான இன்று வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.
எல்விஎம்3 ராக்கெட்டின் இரண்டாவது வணிக ரீதியான ஏவுதலுக்கான கவுண்ட்டவுன் நேற்று தொடங்கப்பட்டது. 43.5 மீட்டர் உயரம் கொண்ட இந்த ராக்கெட் இன்று காலை 9 மணிக்கு விண்ணில் ஏவப்பட்டது. 5,805 கிலோ எடையுள்ள 36 முதல் தலைமுறை செயற்கைக்கோள்கள் சுமார் 87.4 டிகிரி சாய்வுடன் 450 கி.மீ வட்ட சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது.
LVM-III ராக்கெட் குறித்த தகவல்:
UK-ஐ தளமாகக் கொண்ட Network Access Associated Ltd (OneWeb)-யின் 36 செயற்கைக்கோள்களை லோ எர்த் ஆர்பிட்டிற்கு (LEO- low earth orbit) அனுப்பியுள்ளது.
OneWeb Group நிறுவனம் 72 செயற்கைக்கோள்களை LEO க்கு அனுப்ப இஸ்ரோவின் வணிகப் பிரிவான நியூஸ்பேஸ் இந்தியா லிமிடெட் உடன் ஒப்பந்தம் செய்துள்ளது. OneWeb என்பது விண்வெளியில் இருந்து இயங்கும் உலகளாவிய தொடர்பு நெட்வொர்க் ஆகும், இது அரசாங்கங்கள் மற்றும் வணிகங்களுக்கான இணைய சேவையை செயல்படுத்துகிறது.
பாரதி எண்டர்பிரைசஸ் நிறுவனத்தை ஒரு பெரிய முதலீட்டாளராகக் கொண்டுள்ள OneWeb கொண்டுள்ளது. பிப்ரவரியில் SSLV-D2/EOS07 தொடர்பான பணிகளுக்கு பிறகு, OneWeb India-2 மிஷன் இந்த ஆண்டில் இஸ்ரோவின் இரண்டாவது வெற்றிகரமான ஏவலாகும். இந்த ஏவுகணையானது ஜியோசின்க்ரோனஸ் செயற்கைக்கோள் ஏவு வாகனம் Mk-III (GSLV Mk-III) என அழைக்கப்பட்டது.
முன்னதாக One web சார்பில் குறிப்பிடுகையில், 2023 ஆம் ஆண்டில் உலகளாவிய இணைய சேவையினை வழங்க உள்ளதாக One web நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் கூறுகையில், "17 ஏவுதல்கள் இதுவரை நிறைவடைந்துள்ளன. இந்த வார இறுதியில் (மார்ச் 26- இன்று) இஸ்ரோ மற்றும் நியூஸ் பேஸ் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் எங்கள் தொழில் பங்கீட்டாளர்களுடன் மேலும் 36 செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்துவதால், சுற்றுப்பாதையில் 616 செயற்கைக்கோள்களை நிலைநிறுத்துவோம். "
இந்த நிலையில், 'எல்.வி.எம்-3' ராக்கெட் திட்டம் வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டது குறித்து இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவிக்கையில், செயற்கைக்கோள்கள் புவி சுற்றுவட்டப் பாதையில் சரியாக பயணித்து நிலைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் இந்த திட்டத்தை வெற்றிகரமாக முடித்த குழுவினருக்கு எனது பாராட்டுகள் என இஸ்ரோ தலைவர் சோம்நாத் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் காண்க:
Tally ERP-9 குறித்து 5 நாட்கள் இணைய வழி பயிற்சி- பங்கேற்பதால் இவ்வளவு நன்மையா?
க்ரிஷி ஜாக்ரானின் ”உழவர் பத்திரிக்கையாளர்” திட்டத்தை பாராட்டிய ஒன்றிய அமைச்சர்கள்
Share your comments