மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் மறைவுக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தின் மிகத் தொன்மையான சைவ சமயத் திருமடங்களில் ஒன்று மதுரை ஆதீனம். மதுரை நகரில் அமைந்துள்ள இந்த ஆதீனம் சுமார் 1500 ஆண்டுகளுக்கு முன்பு சைவசமய நாயன்மார்களில் ஒருவரான திருஞானசம்பந்தரால் தோற்றுவிக்கப்பட்டது.
292 ஆவது பீடாதிபதி
சைவ சித்தாந்தங்களை அடிப்படையாகக் கொண்ட இந்தத் திருமடத்திற்கு, இதுவரை மொத்தம் 292 பேர் மடாதிபதியாக இருந்துள்ளனர். தற்போதைய 292 ஆவது பீடாதிபதி அருணகிரிநாத சுவாமிகள் நேற்று சிவலோக பிராப்த்தி அடைந்தார்.
தலைவர்கள் இரங்கல் (Leaders Tribute)
சுவாசக் கோளாறு காரணமாக மதுரை அப்பல்லோ மருத்துவமனையில் சில நாட்களாக சிகிச்சைப் பெற்று வந்த குருமகா சன்னிதானம் மதுரை ஆதீனத்தின் மறைவுக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி உட்பட பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு (Official announcement)
இந்நிலையில் கடந்த 2019ஆம் ஆண்டு இளைய மடாதிபதியாக மதுரை ஆதினம் அருணகிரிநாதர் அவர்களால் முடிசூட்டப்பட்ட, ஸ்ரீல ஸ்ரீ ஹரிஹர தேசிய ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் அவர்கள் மதுரை ஆதீன மடத்தின் 293வது மடாதிபதியாக இருப்பார் என மதுரை ஆதீன மட நிர்வாகிகள் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
நித்தியானந்தா
முன்னதாக, மதுரை ஆதீன மடத்தின் 292வது பீடாதிபதி அருணகிரிநாதரால் அடுத்த வாரிசு என்று ஒரு காலத்தில் அறிவிக்கப்பட்டிருந்த நித்தியானந்தா, தானே அடுத்த மடாதிபதி என தனது பேஸ்புக் பக்கத்தில் தெரிவித்து புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக தனது பேஸ்புக் பக்கத்தில் நித்தியானந்தா வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் தன்னை மதுரை ஆதீன மடத்தின் 293 வது பீடாதிபதியாக அறிவித்துள்ளார்.
நுழையத் தடை
இது தொடர்பான வழக்கில், 2018 ஆம் ஆண்டு வழங்கப்பட்ட உத்தரவில், மதுரை ஆதீன மடத்திற்குள் நுழையத் தடை விதிக்கப்பட்டது.
கைலாசவாக
ஆஸ்திரேலியாவில் உள்ள தனித் தீவு ஒன்றினை, நித்தியானந்தா சொந்தமாக வாங்கி 'கைலாசவாக' மாற்றியிருக்கிறார். தொடர்ந்து அந்தக் கைலாசாவில் குடியேறிய நித்தியானந்தா அவ்வப்போது வீடியோக்களை வெளியிட்டுப் பரபரப்பை ஏற்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க...
முதல் வேளாண் பட்ஜெட்: தரிசு நிலங்களை பரிசு நிலங்களாக மாற்றி சாகுபடி பரப்பு உயர்த்தப்படும்!
Share your comments