1. செய்திகள்

வரலாறு காணாத விலை ஏற்றத்தில் மதுரை மல்லிகை: கிலோ ரூபாய் 4000!

R. Balakrishnan
R. Balakrishnan
Madurai Jasmine at an unprecedented price hike

தொடர் மழை காரணமாக விளைச்சல் இன்மையால் மதுரை மல்லிகை வரலாறு காணாத விலை ஏற்றத்தைச் சந்தித்துள்ளது. வடகிழக்குப் பருவமழையின் காரணமாக தமிழகமெங்கும் வழக்கத்தை விடப் பலமடங்கு கூடுதலாக மழை பெய்து ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதோடு வயல்வெளிகளையும் தோட்டப் பயிர்களையும் வெள்ளம் மூழ்கடித்தது. இதனால் பல ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாயம் பாதிக்கப்பட்டது.

மல்லிகைப் பூ விலை உயர்வு (jasmine Price Raised)

மதுரையின் தனித்தன்மையாகக் கருதப்படும் மதுரை மல்லிகை மலரின் விலை கடுமையான ஏற்றத்தைச் சந்தித்துள்ளது. கடந்த ஒரு மாதகாலமாகவே மழை பாதிப்பு காரணமாக விளைச்சல் பாதிக்கப்பட்டது. இதனால் சந்தைக்குப் பூக்களின் வருகைக் குறைவால் இந்த ஆண்டு பூக்களின் விலை பூக்கள் சந்தையில் சற்று அதிகமாகவே உள்ளது.

அந்த வகையில் இன்று மதுரை மலர்ச் சந்தையில் ஒரு கிலோ மல்லிகைப் பூவின் விலை ரூபாய் 4000. இந்த விலையேற்றம் வரலாறு காணாத அளவிற்கு இந்த ஆண்டு மிகப்பெரிய விலை ஏற்றத்தைக் கொடுத்துள்ளது.

தொடர் மழை (continuous rain)

தொடர் மழை, விளைச்சல் குறைவு, வரத்துக் குறைவால் இந்த விலை ஏற்றம் என்று விவசாயிகளும் வியாபாரிகளும் தெரிவிக்கின்றனர். மல்லிகைப் பூ மட்டுமில்லாமல் அனைத்துவிதமான பூக்களின் விலையும் சற்று கணிசமாக உயர்ந்துள்ளது.

மேலும் படிக்க

300 ரூபாயைத் தாண்டியது முருங்கை: உச்சத்தில் காய்கறிகள் விலை!

மாடித் தோட்டம் அமைக்க மானிய விலையில் செடி, விதைகள்! தொடங்கி வைத்தார் முதல்வர்!

English Summary: Madurai Jasmine at an unprecedented price hike: Rs 4000 per kg! Published on: 12 December 2021, 07:54 IST

Like this article?

Hey! I am R. Balakrishnan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.