தொழிலாளர் வருங்கால வைப்புநிதி நிறுவனத்தின் (EPFO) தொழிலாளர் பென்சன் திட்டத்தின் (EPS) கீழ் பல லட்சக்கணக்கான ஓய்வூதியதாரர்கள் பென்சன் பெற்று வருகின்றனர். இந்நிலையில், EPFO பென்சனுக்கான முக்கிய விதிமுறை மாற்றப்பட்டுள்ளது.
ஓய்வூதியம் (Pension)
ஒவ்வொரு ஓய்வூதியதாரரும் ஆண்டுக்கு ஒருமுறை வாழ்நாள் சான்றிதழை (Life certificate) சமர்ப்பிக்க வேண்டும். வாழ்நாள் சான்றிதழ் என்பது ஓய்வூதியதாரர் உயிருடன் இருக்கிறார் என்பதற்கான சான்று ஆகும். எனவே, வாழ்நாள் சான்றிதழ் சமர்ப்பித்தால் மட்டுமே பென்சன் தொடர்ந்து கிடைக்கும். EPFO பென்சன் பெறும் ஓய்வூதியதாரர்கள் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 30ஆம் தேதிக்குள் வாழ்நாள் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும் என்பது இதுவரை இருந்த விதிமுறை. இந்நிலையில், இந்த விதிமுறை மாற்றப்பட்டுள்ளதாக EPFO அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இதன்படி, இனி EPFO ஓய்வூதியதாரர்கள் ஆண்டு முழுவதும் எப்போது வேண்டுமானாலும் வாழ்நாள் சான்றிதழ் சமர்ப்பித்துக் கொள்ளலாம். வாழ்நாள் சான்றிதழ் சமர்ப்பிக்கப்பட்ட நாளில் இருந்து ஒரு ஆண்டு வரை சான்றிதழ் செல்லும். அதன்பிறகு காலாவதியாகி விடும். கடைசி தேதிக்குள் அடுத்த வாழ்நாள் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும்.
வாழ்நாள் சான்றிதழ் சமர்ப்பிப்பது எப்படி?
- உங்களுக்கு எந்த வங்கி வழியாக பென்சன் வருகிறதோ அந்த வங்கியிடம் சமர்ப்பிக்கலாம்.
- பொது சேவை மையங்களிலும் சமர்ப்பிக்கலாம்.
- தபால் அலுவலகம் வாயிலாகவும் சமர்ப்பிக்கலாம்.
- தபால் துறை வங்கி (India Post Payments Bank) வாயிலாக சமர்ப்பிக்கலாம்.
- தபால் துறை வங்கி (India Post Payments Bank) வாயிலாக சமர்ப்பிக்கலாம்.
- அருகில் உள்ள EPFO அலுவலகத்தில் சமர்ப்பிக்கலாம்.
- மொபைலிலேயே UMANG App வாயிலாக சமர்ப்பிக்கலாம்.
தேவையான விவரங்கள் (Required Documents)
- பிபிஓ எண் (PPO Number)
- ஆதார் எண்
- வங்கி கணக்கு விவரம்
- ஆதார் அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்
மேலும் படிக்க
புதிய தங்க சேமிப்புத் திட்டம்: மிஸ் பண்ணிடாதீங்க!
ரிசர்வ் வங்கி ரிப்போர்ட்: வங்கி மோசடிகளில் எந்த வங்கிக்கு முதலிடம்!
Share your comments