1. செய்திகள்

பல லட்சம் ஆண்டுகள் பழமை வாய்ந்த கல்லாகி போன மரம்: காட்சிக்கு வைப்பு!

R. Balakrishnan
R. Balakrishnan

Fossil wood

ஆண்டிபட்டி அரசு அருங்காட்சியகத்தில் 'கல்லாகிப் போன மரம்' இம்மாதம் பொதுமக்கள் பார்வைக்கு காட்சிப்படுத்தப்பட்டு உள்ளது. இதுகுறித்து அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் கிருஷ்ணம்மாள் கூறியதாவது: ஆண்டிபட்டி அரசு அருங்காட்சியகத்தில் ஒவ்வொரு மாதமும் ஓர் அரிய பொருள் பொது மக்கள் காட்சிக்கு வைக்கப்பட்டு அதன் அருமை பெருமைகள் பொது மக்கள் அறிந்து கொள்ளும்படி விழிப்புணர்வு ஏற்படுத்துகிறோம். இம்மாதம் 'கல்லாகிய மரம்' என்ற மர புதை படிமம் குறிப்புகளுடன் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.

கல்லாகிய மரம் (Fossil Wood)

புதை படிமங்கள் என்பவை பழங்காலத்தில் வாழ்ந்த விலங்குகள், தாவரங்களின் எச்சங்களும் இயற்கையாக பூமியில் புதைந்து பாதுகாக்கப்பட்டு இருக்கும் மிக அரிய பொருட்களாகும். புதை படிமங்களை பற்றி தெரிந்து கொள்வதன் மூலம் வரலாற்றிற்கு முந்தைய காலத்தில் வாழ்ந்த விலங்குகள் அதன் பரிணாம வளர்ச்சி குறித்து அறிய முடியும். மேலும் ஒரு நாட்டின் பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த கரி மற்றும் பெட்ரோலியம் போன்ற அரிய பொருட்கள் கிடைக்கும் இடங்களையும் கண்டறிய முடியும்.

காலங்கள் செல்லச் செல்ல பூமிக்குள் புகையுண்ட மரங்களில் இருந்து கரிம பொருட்கள் சிதைவடைந்து பூமியின் இயற்பியல் மாற்றங்களினால் நாளடைவில் மரத்தில் உள்ள கரிம பொருட்கள் இறுகி கல் படிமங்களாக மாறுகின்றன. இந்த அரிய பொருள் தேனி மாவட்ட புவியியல் மற்றும் கனிமவளத்துறை மூலம் அருங்காட்சியகத்திற்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளது.

இதன் காலம் சுமார் 2 கோடி ஆண்டுகள் இருக்கலாம் என்று கண்டறியப்பட்டுள்ளது. இந்த கல்மரம் என்ற மர புதைபடிமத்தை இம்மாதம் பொதுமக்கள் கண்டு களிக்கலாம் என்றார்.

மேலும் படிக்க

குடிநீர்ப் பிரச்சனையைத் தீர்க்க சொந்த நிலத்தை தானமாக வழங்கிய தம்பதியர்!

தமிழக காவல் துறைக்கு ஜனாதிபதியின் சிறப்பு கொடி!

English Summary: Many lakhs of years old Fossil Wood on display!

Like this article?

Hey! I am R. Balakrishnan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2025 Krishi Jagran Media Group. All Rights Reserved.