தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், முக்கியத் தடுப்பு நடவடிக்கையாக வரும் ஏப்ரல் 17 ஆம் தேதி முதல் முக கவசம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தினசரி கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்நிலையில், தமிழக சுகாதாரத் துறை இம்முடிவை எடுத்துள்ளது.
முகக்கவசம் கட்டாயம் (Mask)
தமிழக சுகாதாரத் துறை ஆனது மாநிலத்தின் தினசரி கொரோனா பாதிப்பு குறித்த அறிக்கையை வெளியிட்டு வருகிறது. நேற்றைய நிலவரத்தின்படி தமிழகத்தில் ஒரே நாளில் 469 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் ஒருவர் கொரோனா தொற்று பாதிப்பினால் உயிரிழந்துள்ளார். இந்நிலையில், கொரோனா வைரஸ் அதிகரிப்பால் மீண்டும் கட்டுப்பாடுகள் தீவிரம் அடைந்துள்ளன.
தொடர்ந்து கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருவதால் மாநில அரசு தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைகளை மேற்கொண்டது. இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் ஏப்ரல் 17ஆம் தேதி (திங்கட்கிழமை) முதல் முகக் கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் அனைவரும் கொரோனா வைரஸ் பாதிப்பின் தீவிரத்தை உணர்ந்து, முக கவசம் அணிந்து கொள்ள வேண்டும். மேலும் தனிமனித விலகலையும் முறையாக கடைப்பிடிக்க வேண்டும்.
மேலும் படிக்க
பெண்களுக்கான "மகளிர் மேன்மை சேமிப்பு பத்திரம்": அஞ்சலகத் திட்டம் அறிமுகம்!
குறைந்த முதலீட்டில் பெண்களுக்கான சிறப்பு சேமிப்புத் திட்டம்!
Share your comments