தென் தமிழகத்தின் 34 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் பதிவாக வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
வானிலை முன்னறிவிப்பு (Weather Forecast)
காற்றின் சுழற்சி (Convection)
18.03.21
தமிழகம், புதுவை காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.
வானிலை முன்னறிவிப்பு (Weather Forecast)
19.03.21
தமிழகம், புதுவை காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே (Dry weather) நிலவும்.
20.03.21
வளிமண்டலத்தில் ஒரு கிலோமீட்டர் உயரம்வரை ஏற்படக்கூடிய காற்றின் சுழற்சி காரணமாக, தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்யக்கூடும்.
21.03.21 மற்றும் 22.03.21
21.03.21 மற்றும் 22.03.21 தேதிகளில் தென் மாவட்டஙகளில் ஓரிரு இடங்கயில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது.
ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுரை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.
சென்னை (Chennai)
சென்னையைப் பொறுத்தவரை, அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் தெளிவாகக் காணப்படும். வெப்பநிலை (Temperature) அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸையும், குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸையும் ஒட்டியே இருக்கும்.
மீனவர்களுக்கு எச்சரிக்கை (Warning to fishermen)
மீனவர்களுக்கு எந்தவித எச்சரிக்கையும் விடுக்கப்படவில்லை. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னெச்சரிக்கை
எனினும், கோடை வெயிலின் தாக்கம் அதிகரிக்கத் தொடங்கிவிட்டதால், மக்கள் சற்று விழிப்புடன் இருக்க வேண்டும். மதிய வேளையில் வெளியில் செல்வதைத் தடுத்தால், பல நோய்களுக்கு ஆளாகாமல் தவிர்த்துக்கொள்ளலாம்.
மேலும் படிக்க...
வாழையில் ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை! வேளாண் கல்லூரி மாணவர்கள் விளக்கம்!
நாம் ஏன் இயற்கை விவசாய முறையைக் கையாள வேண்டும்?
Share your comments