Krishi Jagran Tamil
Menu Close Menu

எம் பி பி எஸ் மற்றும் பிடிஎஸ் 2019 ஆம் ஆண்டிற்கான மாணவர்கள் சேர்க்கை: வரும் ஜூன் 6 ஆம் தேதி முதல் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்

Thursday, 16 May 2019 04:57 PM

மருத்துவத்துறை மற்றும் பல் மருத்துவத்திற்கான படிப்பில் சேர்வதற்கான விண்ணப்ப படிவம் வரும் ஜூன் 6 ஆம் தேதி முதல் இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என இந்தியா மருத்துவத்துறை அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.

நாடு முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளில், 2019 -2020 ஆம் ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது. இந்த துறையில் சேருவதற்கு அடிப்படை தகுதியான நுழைவு தேர்வு எனும் நீட் தேர்வு கடந்த மாதம் 5 ஆம் தேதி நாடு முழுவதும் நடைபெற்றது.

நீட் தேர்வினை நாடு முழுவதிலுமிருந்து 15 லட்சத்திற்க்கும் அதிகமான மாணவர்கள் இந்த தேர்வினை எழுதினார்கள். தமிழகத்திலிருந்து மட்டும் 1 லட்சத்து 19 ஆயிரம் மாணவர்கள் தேர்வு எழுதி உள்ளனர். நீட் தேர்வு முடிவுகள் வரும் ஜூன் 5 ஆம் தேதி வெளியாகும் நிலையில், மருத்துவ கல்லூரி விண்ணப்ப படிவம் ஜூன் 6 ஆம் தேதி முதல் இணையதளத்தில் இருந்து மாணவர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என இந்திய மருத்துவ துறை கூறியுள்ளது.

http://www.tn.health.org/, http://www.tnmedicalselection.org/ ஆகிய இணையத்தளத்தில் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். முதல் கட்ட மாணவர்கள் கலந்தாய்வு ஜூன் 26 ஆம் தேதி முதல் ஆரம்பமாகும் என தகவல் வெளியிட்டுள்ளது.   

MBBS BDS மருத்துவத்துறை மாணவர்கள் சேர்க்கை விண்ணப்ப படிவம் மருத்துவ கல்லூரி

Share your comments


CopyRight - 2019 Krishi Jagran Media Group. All Rights Reserved.