தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள 8 மாவட்டங்களை தவிர்த்து பிற மாவட்டங்களில் பேருந்து சேவையை அனுமதிக்கலாம் என மருத்துவ வல்லுநர் குழு பரிந்துரைத்துள்ளது.
தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு
கொரோனா தொற்று காரணமாக தமிழகத்தில் கடந்த மே மாதம் 10 தேதி முதல் ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. தற்போது கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருவதையொட்டி கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்களை தவித்து பிற மாவட்டங்களில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் ஊரடங்கு தளர்வுகள் குறித்து ஆலோசனை
தமிழ்நாட்டில் தற்போது அமலில் உள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வரும் 21 ஆம் தேதியுடன் முடிவுக்கு வருகிறது. தற்போது கொரோனா நோய் தொற்று குறைந்து வரும் நிலையில், ஊரடங்கு நீட்டிப்பு தொடர்பாக மருத்துவ குழுவுடன் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார்.
பேருந்து சேவைக்கு அனுமதி?
அப்போது, நோய்த்தொற்று அதிகமுள்ள கோவை, திருப்பூர் உள்ளிட்ட 8 மாவட்டங்களை தவிர பிற மாவட்டங்களில் பேருந்து சேவையை அனுமதிக்கலாம் என மருத்துவ குழு பரிந்துரைத்துள்ளது. 50 சதவீத பயணிகளுடன் பேருந்துகள் இயக்கப்பட வேண்டும் என வல்லுநர் குழு பரிந்துரையில் தெரிவித்துள்ளது.
நோய்த்தொற்று குறையாத மாவட்டங்களில் தளர்வுகள் கூடாது எனவும் மருத்துவ வல்லுநர் குழு பரிந்துரைத்துள்ளது. தொற்று குறைந்த மாவட்டங்களில் வணிக நிறுவனங்கள், ஷாப்பிங் மால்கள் திறக்கவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆலோசனை தற்போது முடிந்துள்ள நிலையில், இதுதொடர்பான உறுதியான முடிவுகளை முதலமைச்சர் முக ஸ்டாலின் விரைவில் வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க...
தொழில்துறையை மேம்படுத்த சிறப்பு கடன்! கொரோனா ஊரடங்கால் பாதித்தோருக்கு உதவி
பிரதமரை சந்தித்து 30 கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தியுள்ளார் முதல்வர் ஸ்டாலின்!
Share your comments