1. செய்திகள்

ஆகஸ்ட் 7 இல் மெகா தடுப்பூசி முகாம்: பூஸ்டர் டோஸ் இலவசம்!

R. Balakrishnan
R. Balakrishnan
Mega Vaccination Camp

கொரோனா தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக, தடுப்பூசிகள் செலுத்தும் பணி, 2021 இல் தொடங்கப்பட்டது. தற்போது 12 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடப்படுகிறது. இதனால், கொரோனா வைரஸ் பரவல் கட்டுப்படுத்தப்பட்டது. இருப்பினும் மீண்டும் கொரோனா பரவல் அதிகரிக்கத் தொடங்கியதால், தடுப்பூசி முகாம்களை அரசு நடத்தி வருகிறத.

பூஸ்டர் டோஸ் (Booster Dose)

தடுப்பூசி முகாமில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களில், இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தி, ஆறு மாதம் நிறைவடைந்தோருக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போடப்படுகிறது. இந்த பூஸ்டர் டோஸ் தடுப்பூசி, வருகின்ற செப்டம்பர் மாதம் 30 வரை மட்டுமே இலவசமாக போடப்படும் என்பதால், அதற்குள் தகுதியான அனைவருக்கும் தடுப்பூசி போட, தமிழக அரசு முயற்சி மேற்கொண்டுள்ளது.

தடுப்பூசி முகாம் (Vaccination Camp)

அதன்படி, 33வது மெகா தடுப்பூசி முகாம், 50 இடங்களில் வரும் 7ம் தேதி நடைபெற உள்ளது. இதில், பூஸ்டர் டோஸ் போடாத, 3.50 கோடி பேருக்கு தடுப்பூசி போட, சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

காலக்கெடு முடிவதற்குள் பொதுமக்கள் பூஸ்டர் டோஸை இலவசமாக போட்டுக் கொள்ளுங்கள். இல்லையெனில், பணம் கொடுத்து போட வேண்டிய நிலை உருவாகி விடும்.

மேலும் படிக்க

குரங்கம்மை நோய்த் தடுப்பு: வழிகாட்டு நெறிமுறைகள் வெளியயீடு!

செயற்கைகோளை வடிவமைத்த மதுரை மாணவிகள்: ஆசிரியர்கள் பெருமிதம்!

English Summary: Mega Vaccination Camp on August 7: Free Booster Dose! Published on: 04 August 2022, 12:51 IST

Like this article?

Hey! I am R. Balakrishnan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.