1. செய்திகள்

மேட்டூர் அணை! நீர் வரத்து வினாடிக்கு 35,000 கனஅடியாக அதிகரித்துள்ளது

KJ Staff
KJ Staff
mettur dam

கர்நாடக மாநிலத்தில் கடத்த வாரம் பெய்த கனமழையால் மேட்டூர் அணைக்கு நீர் வரத்து வினாடிக்கு 2 லட்சத்து 53 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்தது. இதனால் கடந்த 13 ஆம் தேதி அணையின் நீர் மட்டம் 100 அடியை எட்டியது. 

காவிரியில் தொடர்ந்து நீர் வந்து கொண்டிருப்பதால் மேட்டூர்  அணையின் நீர் மட்டம்  ஓரிரு நாட்களில் அதன் முழு கொள்ளளவான 120 அடியை எட்டும் என எதிர்பார்க்கப் படுகிறது.

காவிரி நீர்ப்பிடிப்பு இடங்களில் கனமழை காரணமாக கர்நாடகத்தின் கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகளிலிருந்து தொடர்ந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதன் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர் வரத்து வினாடிக்கு 35,000 கனஅடியாக அதிகரித்துள்ளது. அணையின் நீர் மட்டம் 115.3 அடியாகவும், நீர் இருப்பு 86.17 டி.எம்.சி ஆகவும் அதிகரித்துள்ளது.

chances to increase 120 feet

இதே நிலை நீடித்தால் மேட்டூர் அணை ஓரிரு நாட்களில் அதன் முழு கொள்ளளவான 120 அடியை எட்டிவிடும் என்றும் இதனிடையே கர்நாடக அணைகளிலிருந்து திறக்கப்படும் நீரின் அளவு நீர் வரதுக்கு ஏற்ப அவ்வப்போது  மாற்றி அமைக்கப்படுகிறது.

இதன் படி கர்நாடக அணைகளிலிருந்து ஒகேனக்கல்லுக்கு வந்து கொண்டிருக்கும் நீரின் அளவு வினாடிக்கு 30,000 கன அடியாக குறைந்துள்ளது. காவிரியில் நீர் வரத்து அதிரிப்பதால் ஒகேனக்கல் அருவிகள் ஆர்பரிக்கின்றன. தொடர்ந்து 12 வது நாளாக பரிசல் போக்குவரத்து  நிறுத்தப்பட்டுள்ளது.

https://tamil.krishijagran.com/news/the-water-flow-in-mettur-dam-is-increasing-jal-sakthi-board-adviced-people-to-shift-higher-areas/

K.Sakthipriya
Krishi Jagran

English Summary: Mettur Dam! Water level increased by 35,000 cubic feet per second: Chances to 120 feet within a week

Like this article?

Hey! I am KJ Staff. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2021 Krishi Jagran Media Group. All Rights Reserved.