1. செய்திகள்

விவசாயிகளை கௌரவிக்கும் நிகழ்வின் ரோல் மாடலாக மாறும் MFOI

Muthukrishnan Murugan
Muthukrishnan Murugan
MFOI sponsored by Mahindra Tractors

உலகின் முதன்மையான தொழிலாக கருதப்படுவது வேளாண் தொழில். இன்று விவசாயிகள் பல்வேறு பிரச்சினைகளை சந்தித்து வரும் நிலையில், வேளாண் துறையில் சிறந்து விளங்கும் விவசாயிகளை கௌரவிக்கும் நோக்கத்தோடு MFOI விருது வழங்கும் நிகழ்வு அறிவிக்கப்பட்டுள்ளது. நிகழ்வு நாளை தொடங்கும் நிலையில், MFOI-நோக்கம் உலகின் அனைத்து பக்கங்களிலும் எதிரொலிக்கத் தொடங்கியுள்ளது.

சமூகத்தில் ஏதோவொன்றில் ‘The Richest’ என்கிற இடத்தினை பெறுபவருக்கு தனி மரியாதை உண்டு. உண்மையில், ஒட்டுமொத்த ஊடகங்களும் அனைத்துறை சாதனையாளர்களையும் கொண்டாடுகிறதா? என்றால் இல்லை என்பது தான் நிதர்சனம்- பெரும்பான்மையான ஊடகங்களின் கவனமானது வணிகம், விளையாட்டு, பொழுதுபோக்கு என செல்லும் நிலையில் ‘The Richest’ என்கிற இடத்திற்கு விவசாயிகள் தகுதியானவர்களா? என கற்பனை கூட செய்தது இல்லை. நாங்கள் சொல்வது சரிதானே? இனி அந்த கேள்விக்கு இடமில்லை என புதிய அத்தியாயத்தை எழுதத் தொடங்கியுள்ளது “கிரிஷி ஜாக்ரான்”.

1996 ஆம் ஆண்டு க்ரிஷி ஜாக்ரன் தொடங்கியதிலிருந்து 27 ஆண்டுகளாக விவசாயிகளை கௌரவிக்கும் நிகழ்வினை தனது இதயத்திற்கு நெருக்கமாக வைத்திருந்தார், க்ரிஷி ஜாக்ரன் மற்றும் AW-யின் நிறுவனர் & CEO எம்.சி.டொமினிக். அவரது நோக்கம் எல்லாம், விவசாயத்துறையில் இளம் நபர்கள் ஈடுபடும் வகையிலும், தொழில் முனைவோர்களுக்கு ஊக்கமளிக்கும் வகையிலும் செயல்படும் ஒருங்கிணைந்த ஒரு தளத்தை உருவாக்குவதே. அதற்கான ஒரு முன்னெடுப்பு தான் Millionaire Farmer of India- MFOI.

இந்நிலையில், கடந்த ஜூலை மாதம் டெல்லியிலுள்ள சாணக்யபுரியில் உள்ள தி அசோக் ஹோட்டலில் MFOI விருது வழங்கும் நிகழ்விற்கான கோப்பை மற்றும் இலட்சினை வெளியிடும் நிகழ்வு ஒன்றிய கால்நடை பராமரிப்பு, பால்வளம் மற்றும் மீன்வளத்துறை அமைச்சர் பர்ஷோத்தம் ரூபாலா தலைமையில் பிரம்மாண்டமாக நடைப்பெற்றது.

அதனைத் தொடர்ந்து, 15 பிரிவுகளின் கீழ் இந்தியா முழுவதுமிருந்து விவசாயிகள் விருதுக்கு விண்ணப்பித்தனர். இவர்களில் மாவட்டம், மாநிலம், மற்றும் தேசிய அளவில் தேர்ந்தெடுக்கப்பட்ட மில்லினியர் விவசாயிகளை கௌரவிக்கும் நிகழ்வு டிசம்பர் 6,7,8 டெல்லியில் உள்ள பூசா மைதானத்தில் நடைப்பெற உள்ளது.

MFOI Awards 2023 நிகழ்வின் முதன்மை ஸ்பான்ஸராக இணைந்தது மஹிந்திரா டிராக்டர்ஸ்

இந்த மில்லினியர் விவசாயிகளின் வேளாண் நடைமுறைகள் மற்றும் சந்தைப்படுத்தும் திறன், வேளாண் தொழிலில் ஈடுபட முயலும் இளைஞர்கள் மற்றும் நஷ்டத்தை சந்தித்து வரும் விவசாயிகளுக்கு பெரிய உந்துசக்தியாக இருக்கும் என கருதப்படுகிறது.

விவசாயிகளை கெளரவிக்கும் MFOI நிகழ்வின் நோக்கம் தற்போது உலகின் அனைத்து கவனத்தையும் ஈர்த்துள்ள நிலையில் மலேசியா, ஜப்பான் போன்ற நாடுகளிலும் மில்லினியர் விவசாயிகளை வெளிச்சம் போட்டு உலகின் கவனத்திற்கு கொண்டுச் செல்லும் நோக்கில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. விவசாயிகளின் புகழை பறைசாற்ற இந்தியாவிலிருந்து தன் பயணத்தை தொடங்க உள்ள MFOI, அனைத்து நாடுகளிலும் விவசாயிகளுக்கான ஆஸ்கர் விருதாக மாறும் காலம் தொலைவில் இல்லை எனலாம்.

இதையும் காண்க: விவசாயிகளின் புகழை பாறைசாற்ற தயாராகும் MFOI Kisan Bharat yatra

English Summary: MFOI becomes the role model of the event to honor the farmers Published on: 05 December 2023, 12:31 IST

Like this article?

Hey! I am Muthukrishnan Murugan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.