MFOI சம்ரித் கிசான் உத்சவ் நிகழ்வானது விவசாயிகளின் வருவாயைப் பெருக்குவதையும், வளமான இந்தியாவின் வளர்ச்சிக்கு வேளாண் பங்களிப்பினை உறுதி செய்வதையும் முதன்மை நோக்கமாக கொண்டு இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் கிரிஷி ஜாக்ரன் முன்னெடுப்பில் நடைப்பெற்று வருகிறது. அந்த வகையில் சமீபத்தில், உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வாரில் 500-க்கும் மேற்பட்ட விவசாயிகளின் பங்கேற்புடன் வெகு விமர்சையாக நடைப்பெற்றது.
உத்தரகாண்ட் மாநிலம், ஹரித்வார், பகவான்பூரிலுள்ள பிரின்ஸ் ஹோட்டலின் கான்ஃபரன்ஸ் ஹாலில் மஹிந்திரா டிராக்டர்ஸ் நிதியுதவி பங்களிப்போடு, 'வளமான இந்தியாவிற்கான பாதையில் விவசாயிகளின் வருமானத்தை அதிகரிப்பது' என்ற கருப்பொருளில் MFOI சம்ரித் கிஷான் உட்சாவ் நிகழ்ச்சி நடைப்பெற்றது. முத்தூட் ஃபைனான்ஸ் மற்றும் சோமானி சீட்ஸ் ஆகிய நிறுவனங்களும், பூஅம்ரித் உழவர் உற்பத்தியாளர் நிறுவனம், ஹிரித்வார் வேளாண் அறிவியல் மையமும் இந்த நிகழ்விற்கு தங்களது ஆதரவினை வழங்கியிருந்தனர்.
500-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்பு:
பும்ரித் உழவர் உற்பத்தியாளர் நிறுவனத் தலைவர் ரவிகிரண் சைனி கூறுகையில், "எங்கள் நிறுவனம் 500-க்கும் மேற்பட்ட விவசாயிகளின் ஒத்துழைப்புடன், உற்பத்தி முதல் சந்தைப்படுத்துதல் வரை சந்தையில் போட்டி விலையைப் பெறுவதை உறுதி செய்கிறது. ஐஐடி ரூர்க்கி உடனான எங்கள் கூட்டாண்மை மூலம் , விவசாயிகள் நேரடியாக வானிலை அறிவிப்புகளைப் பெறுகிறார்கள்" என்றார்.
மஹிந்திரா டிராக்டர்களின் ZMM, திக்விஜய் ராஜ்புத் பேசுகையில், அதிநவீன விவசாய இயந்திரங்களினால் வேளாண் துறையில் ஏற்பட்ட மாற்றத்தை எடுத்துரைத்தார். அவரது விளக்கக்காட்சியில் சமீபத்திய மஹிந்திரா டிராக்டர் மாடல்கள் காட்சிப்படுத்தப்பட்டன.
ஹரித்வாரின் மாவட்ட தோட்டக்கலை அதிகாரி மஹிபால் பேசுகையில், ”க்ரிஷி ஜாக்ரனின் 'MFOI சம்ரித் கிசான் உத்சவ்' முயற்சிக்கு தனது பாராட்டுகளைத் தெரிவித்தார். இந்நிகழ்ச்சி விவசாயிகளுக்கு அதிகாரம் அளிப்பதோடு மட்டுமல்லாமல், அவர்களின் தொழிலில் பெருமித உணர்வையும் ஏற்படுத்துகிறது” எனக் குறிப்பிட்டார்.
க்ரிஷி ஜாக்ரன் மற்றும் அக்ரிகல்ச்சர் வேர்ல்டின் நிறுவனர் மற்றும் தலைமை ஆசிரியரான எம்.சி. டொமினிக் நன்றியுரை வழங்கினார். எம்.சி.டொமினிக் பேசுகையில், “இந்த சம்ரித் கிசான் உத்சவை வெற்றியடையச் செய்ய நேரம் ஒதுக்கிய உங்கள் அனைவருக்கும் நன்றி. கடந்த ஆண்டு தில்லியில் உள்ள பூசா மேளா மைதானத்தில் பிரம்மாண்டமான கோடீஸ்வர விவசாயி விருது நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தோம், இதில் நாடு முழுவதும் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோடீஸ்வர விவசாயிகள் (ரூ. 10 லட்சத்துக்கு மேல்) கலந்து கொண்டனர். இந்த விவசாயிகளுக்கு மாவட்டம், மாநிலம், தேசியம் என மூன்று நிலைகளில் விருதுகள் வழங்கப்பட்டன.”
” நடப்பாண்டு நடைப்பெற உள்ள நிகழ்விற்கு, ஹரித்வாரில் உள்ள விவசாயிகள் தங்களது பெயர்களை விருதுக்கு பரிந்துரைத்து, இந்த ஆண்டுக்கான 'மில்லியனர் ஃபார்மர் ஆஃப் இந்தியா விருது' நிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன், இதனால் அவர்கள் மாவட்டம் மற்றும் மாநில அளவில் மட்டுமின்றி தேசிய அளவிலும் அங்கீகாரம் பெற முடியும்.” எனவும் தெரிவித்தார்.
MFOI 2023- நிகழ்வினைத் தொடர்ந்து, Millionaire Farmer of India Awards 2024- நிகழ்வுக்கு விவசாயிகளிடமிருந்து விண்ணப்பங்கள் தற்போது வரவேற்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Read more:
ஊடுபயிராக பசுந்தீவன பயிர்- ஏக்கருக்கு ரூ.3000 அரசு மானியம்!
சொர்ணவாரி நெல் மற்றும் கம்பு பயிருக்கு பயிர் காப்பீடு- இறுதித்தேதி அறிவிப்பு!
Share your comments